செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

Tag: latest tamil news

தூத்துக்குடி சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் – ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

தூத்துக்குடி சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் – ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தூத்துக்குடி விமான நிலையத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவருக்கு எதிராக கோஷமிட்டதாக கைது செய்யப்பட்ட சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி, தற்போதைய தெலங்கானா மாநில ஆளுநரும், அப்போதைய தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும், அங்கிருந்த சோபியா என்ற மாணவி, பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இதனால், தமிழிசை சவுந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சோபியா மீது விமான நிலைய அதிகாரியிடம் தமிழிசை புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசார் சோபியாவை கைது செய்தனர் இந்த ...
EPS-OPS 2 அமாவாசைகள் சொல்றாங்க 27 அமாவாசைல ஆட்சி முடிஞ்சுரும்னு  – உதயநிதி சரவெடி!

EPS-OPS 2 அமாவாசைகள் சொல்றாங்க 27 அமாவாசைல ஆட்சி முடிஞ்சுரும்னு – உதயநிதி சரவெடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  சட்டசபையை முடக்கி விட்டு தேர்தலை சந்தித்தால் ஒரு இடத்தில் கூட அதிமுக ஜெயிக்காது என திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்காக தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க இளைஞர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வேனில் இருந்தபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், “தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பொழுது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்தது. போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு தமிழகத்தில் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தினோம். தமிழகத்தில் முதலாவது அலையின் போது அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. அப்பொழுது ஒரு கோடி அளவிற்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா அலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தடுப்பு ஊசி கண்டிப்பாக போட வேண்டும் என்று மக்கள் மத்தியில...
இன்றைய முக்கியச் செய்திகள்  Today Head Lines 08-02-22

இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 08-02-22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள்
  நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் மசோதா நிறைவேற்றும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. மாநில காங்கிரஸ் தலைவராக தாம் தொடர்ந்தால், எந்த எம்எல்ஏக்களின் வாரிசுகளும் துறைத் தலைவர்களாக முடியாது என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் நெஞ்சுவலி காரணமாக அருப்புகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 மாத பரோலில் வெளிவந்த ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் சூரப்ப நாயக்கன்பட்டியில் இருந்தார். அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியின் போது செல்போன் வைத்திருக்கக் கூடாது என்று நா...
இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 4.2.22

இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 4.2.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி ஊர்வலம், பேரணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 11-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, சென்னை மாநகராட்சி மன்றக் கூடம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலான பின்பு கடந்த 7 நாட்களில் சென்னையில் மட்டும் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் 699 மூத்த அதிகாரிகள் வட்டார பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 27,365 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.   நீட் தேர்வுக்கு எதிரான மசோத...
இன்றைய முக்கியச் செய்திகள் – Today Head Lines – 03.02.22

இன்றைய முக்கியச் செய்திகள் – Today Head Lines – 03.02.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள்
  அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு இந்தியா முழுவதுமுள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேல்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், அமமுகவுக்கு குக்கர் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக ஆயிரத்து 429 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் பகுதியில் இன்று இரண்டு ஆடுகளை கொன்று சிறுத்தை அட்டகாசம் செய்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். நம்பியூர் காந்தி நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள...
சீட் பங்கீடு கலாட்டா… திமுகவினர் மீது காங்., எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

சீட் பங்கீடு கலாட்டா… திமுகவினர் மீது காங்., எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

HOME SLIDER, kodanki darbar, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்த தன்னை திமுகவினர் வெளியேற்றிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கலந்தாலோசிக்காமல் வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஜோதிமணி இதுபற்றி கேட்டதாகவும், அதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும்படி திமுகவினர் கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் . இதைத் தொடர்ந்து வெளியே வந்த ஜோதிமணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்...
தாம்பூல தட்டு நிறைய பணக் கட்டு.. மதுரை மாநகராட்சி சுயேட்சையின் சுவாரஸ்ய வேட்புமனு தாக்கல்!

தாம்பூல தட்டு நிறைய பணக் கட்டு.. மதுரை மாநகராட்சி சுயேட்சையின் சுவாரஸ்ய வேட்புமனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சங்கரபாண்டியன் என்கிற சமூக ஆர்வலர் கட்டுகட்டான டம்மி பணத்துடன் 'வாக்காளர்கள், வாக்களிப்பதற்கு பணம்பெற வேண்டாம்' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கையில் தாம்பூல தட்டு முழுவதும் 2,000, 500 மற்றும் 200 ரூபாய் டம்மி பணத்தை கட்டுகட்டாக அடுக்கிவைத்தபடி வந்து மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்று வேட்புமனுதாக்கல் செய்தார். மண்டல அலுவலகத்தின் வாசல் முன்பு வரை டம்மி பணம் மற்றும் பாதகைகளுடன் வேட்பாளர் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்புமனுவுடன் மட்டும் அனுமதிக்கப்பட்டார். பின் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்க...
இன்றைய முக்கியச் செய்திகள் 27.01.22

இன்றைய முக்கியச் செய்திகள் 27.01.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள்
  தமிழ்நாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பரவல் குறைந்து, தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மறுப்பு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தேசிய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை தொடங்கவிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் மற்றும் பொது நூலக விதிகளில் நவீன காலத்திற்கு ஏற்ப திருத்தங்கள் மேற்கொள்ள உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 424 கோடி ரூபாய் செலவில் ஈரோடு,...
டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் – முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் – முதல்வர் ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் - முதல்வர் ஸ்டாலின் குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை, நிபுணர் குழுதான் முடிவு செய்தது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், அலங்கார ஊர்தி தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறினர். ...
இங்கிலாந்தில் தமிழக அரசின் சார்பில் பென்னிகுவிக் சிலை அமைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இங்கிலாந்தில் தமிழக அரசின் சார்பில் பென்னிகுவிக் சிலை அமைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
இங்கிலாந்தில் தமிழக அரசின் சார்பில் பென்னிகுவிக் சிலை அமைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களுக்கு அவருடைய சொந்த நாட்டில் சொந்த ஊரில் சிலை வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணை முல்லைப் பெரியாறு அணை என்பதும், இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது என்பதும், இந்த அணை கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது என்றாலும் தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை தேனி மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணை கடந்த 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கட்டப்பட்ட போது மேஜர் ஜ...