செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

Tag: rain

இன்று தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இன்று தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை ,திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் குறிப்பிட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை ) முதல் 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ள...
சென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு!

சென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு! வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. தெற்கு வங்கக்கடல் மத்தியில் இருந்து வந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் 29 முதல் 31-ந் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. குறை...
5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!

5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவையில்   ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கனமழையும்,  ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 23.09.2021: கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ல...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் 20-ந் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும். 21, 22-ந் தேதிகளில் ஒருசில வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில ...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது! தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்கிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்கிறது. இதனால் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிற 21-ந் தேதி உருவாகிறது. இதனால் கேரளா, கர்நாடகா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில...
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த மாதம் 24-ம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயலும், அதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் அடுத்து உருவான புரெவி புயல் காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் கொட்டியது. அதன்பின், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வறண்ட வானிலையே பெரும்பாலான இடங்களில் நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும், நாளையும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ...
தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயலைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னையில் மிதமான மழை இருந்தாலும் ஒருசில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ...