டப்பிங் சங்கத்தில் தொடர்ந்து முறைகேடு செய்து உறுப்பினர்களை பழி வாங்கும் ராதாரவி – எஸ்.வி சேகர் குற்றச்சாட்டு
தொடர்ந்து டப்பிங் சங்கத்தில் முறைகேடு செய்து உறுப்பினர்களை பழி வாங்கும் ராதாரவி
ஏறத்தாழ 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள டப்பிங் சங்க கட்டிடம் இடிக்கப்பட காரணம், கட்டிட அனுமதி வாங்கியதாக 75 ஆயிரம் ரூபாய் (ரொக்கம்) கணக்கு காட்டிவிட்டு, அந்த பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்தி கட்டிட அனுமதி வாங்காமல் சங்க அலுவலகம் கட்டியதால், அது தொடர்பான வழக்கில் டப்பிங் சங்கம் தோல்வி அடைந்தது.
முறைகேடான கட்டிடத்தை இடிக்கும்படி நீதிமன்றமே உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசாங்கம் அல்ல. ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு தொடர்ந்து அவதூறு பேசி வரும் ராதாரவி, தமிழ்நாடு அரசாங்கம் தன்னை பழிவாங்கவே பதில் சங்க கட்டிடத்தை இடித்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.
திரைத்துறை தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்களை வழங்கி வரும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமான விமர்சனங்களையும் கருத்துகளையும் சங்க விழாக்களிலும் சங...