”தீரா சாதனை,ஆறா ரணம்” மீண்டும் மோதிய அஜீத்-விஜய்?
தமிழ் சினிமாவில் அஜீத்-விஜய் இருவரின் தகவல்கள் என்ன வந்தாலும் அவை பெரும் பரபரப்பாக பெசப்படும். ஒவ்வொரு முறையும் இவர்களின் படங்களின் ரிலீஸ் நேரத்தில் இந்த பரபரப்பு ரசிகர்களின் கடும் வார்த்தை மோதல்களில் சமூக வலைதளப்பக்கங்கள் அனலை கக்கியப்படியே இருப்பது வழக்கம்.
விஜய் தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியிட்டால் அஜீத் தரப்பில் ஒரு புகைப்படம் வெளியாகி இணையத்தை அதிர வைக்கும்.
இந்த முறையும் விஜய் நடிக்கிற கோட் படத்தில் இருந்து 3வது சிங்கிள் லிரிக்கல் பாடல் ஒன்று இன்று வெளியாகும் என நேற்றே அறிவிப்பு வெளியாகி இருந்த்து.
விஜய் ரசிகர்களும் 3வது சிங்கிள் படலுக்காக மிக ஆர்வமாக காத்து இருந்தனர்.
இந்த சூழலில் அஜீத் ரசிகர்களும் வழக்கம் போல இன்றும் தல தரப்பில் ஏதாவது ஒரு அறிவிப்பு வரும் என தங்கள் பங்குக்கு காத்திருந்தனர்.
ர...