திங்கட்கிழமை, ஜூன் 22
Shadow

Author: Kodanki

துருவங்கள் 16 விமர்சனம்

துருவங்கள் 16 விமர்சனம்

விமர்சனம்
ரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு தகவல் வருகிறது. துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? காணாமல் போனதாக கூறப்படும் பெண் யார்? அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா? என்பது குறித்து விசாரிக்க களமிறங்கும் ரகுமானிடம், அதே ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் சொல்கிறார். இந்த பிரச்சினையில் அவர் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிய ரகுமான், அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு, இந்த சம்பவங்களை பற்றிய விசாரணையில் இறங்குகிறார். இறுதியில், இ...
ஜேசுதாசுக்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

ஜேசுதாசுக்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

சினி நிகழ்வுகள், செய்திகள்
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட ஆரம்பித்து 50 வருடங்கள் ஆகின்றன. இதையொட்டி, அவர் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார். கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பினார். நேற்று சென்னையில் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பின்னணி பாடகர் ஜேசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவரது மனைவி சாவித்ரியும் பாத பூஜை செய்து, கால்களில் விழுந்து வணங்கினார்கள். பின்னர் அவர், நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 50 வருடங்கள் என்பது சாதனை அல்ல. ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாக பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஸ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள். என் குரு ஜேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்த...

மன்னிப்பு கேட்ட இயக்குனர் சுராஜ்

செய்திகள்
  விஷால் – தமன்னா ஜோடியாக நடித்த ‘கத்திச்சண்டை’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் டைரக்டு செய்துள்ளார். இதில், தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளதாக சுராஜ் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுராஜ் கூறும்போது, ‘ரசிகர்கள் பணம் கொடுத்து படம் பார்க்க வருகின்றனர். நடிகர்கள் சண்டைபோடவேண்டும், நடிகைகள் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக வரவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கதாநாயகிகள் புடவைக்கட்டிக்கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த வகையில்தான் தமன்னாவை ‘கத்திச்சண்டை’ படத்தில் கவர்ச்சியாக நடிக்க வைத்தேன். இவ்வாறு கூறியதற்க்கு நடிகைகள் நயன்தாரா தமன்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . இதையடுத்து இயக்குனர் சுராஜ் மன்னிப்பு கோரியுள்ளார் சுராஜ் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னை மன்னியுங்கள். செல்வி தமன்னா உள்ளிட்ட அனைத்து கதாநாயகிகளும் என்ன...

தர்மதுரை 100வது நாள் விழா

செய்திகள்
தர்மதுரை திரைப்படத்தின் 100வது நாள் விழா இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது . படத்தில் பங்கேற்ற நடிகை நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞ்சர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பிறந்தநாள் வாழ்த்து

செய்திகள்
இன்று  பிறந்தநாள் காணும்  வசனகர்த்தா திரு.பிரபாகர், 'ஜில்லுன்னு ஒரு காதல்' இயக்குனர் திரு. கிருஷ்ணா  இருவரையும் சென்னை ராயல் சினிமா வாழ்த்துகிறது

பிறந்தநாள் வாழ்த்து

செய்திகள்
  இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை - இயக்குனர் திருமதி.லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சென்னை ராயல் சினிமா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
பலே வெள்ளையத் தேவா விமர்சனம்

பலே வெள்ளையத் தேவா விமர்சனம்

விமர்சனம்
  பலே வெள்ளையத் தேவா விமர்சனம் நாயகன் சசிகுமார் படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா ரோகிணி போஸ்ட் மாஸ்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், ரோகிணிக்கு மதுரை பக்கத்தில் உள்ள வயலூர் என்ற கிராமத்திற்கு பணி மாற்றம் வருகிறது. அந்த ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் வளவன், எந்த வீட்டிலும் டிஷ் ஆன்டெனா மாட்டக்கூடாது என்றும் தனது கேபிள் டி.வி.யையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அராஜகம் செய்து வருகிறார். இதனால், அந்த ஊரில் யாரும் டிஷ் ஆன்டெனா வாங்குவதே கிடையாது. அதே ஊரில், கறிக்கடைக் காரர் பாலா சிங்கின் மகளான நாயகி தான்யா, மகளிர் சுயஉதவிக் குழுவில் பணியாற்றுகிறார். இவரை சசிகுமார் ஒருதலையாக காதலிக்கிறார். அதே ஊரில் வசிக்கும் கலகலப்பான தம்பதிகளான கோவை சரளாவையும், சங்கிலி முருகனையும் கைக்குள் போட்டுக் கொண்டு நாயகியை பின் தொடர்கிறார் சசிகுமார்....
கத்தி சண்டை விமர்சனம்

கத்தி சண்டை விமர்சனம்

விமர்சனம்
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. அதற்கு அடுத்த காட்சியில் நாயகன் விஷால் என்ட்ரி ஆகிறார். அப்பாவியாக வரும் நாயகன் விஷால், நாயகி தமன்னாவைக் காதலிக்க அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தி தனது தங்கையின் மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார் ஜெகபதி பாபு. திடீரென ஜெகபதி பாபுவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அந்த கும்பல் ஜெகபதி பாபுவிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கவில்லையென்றால் உனது குடும்பத்திற்கு தான் பாதிப்பு என அந்த கும்பல் ஜெகபதி பாபுவை மிரட்ட, அவர் விஷாலுக்கு போன் செய்து வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள டைல்ஸ்க்கு அடியில பணம் இருக்கு எடுத்து வா எனக் கூறுகிறார். ஜெகபதி பாபு கூறியதுபோல பணத்தை எடுத்து செல்லும் விஷால் பணத்தைக் கொடுக்காமல் வில்லன்களிடம் சண்டை போட்டு ஜெகபதி பாபுவைக் காப்பா...
மணல் கயிறு 2 விமர்சனம் 

மணல் கயிறு 2 விமர்சனம் 

விமர்சனம்
மணல் கயிறு 2 முதல் பாகத்தில் திருமண புரோக்கராக வரும் விசுவிடம் எட்டு கண்டிஷன்கள் போட்டு, அவர் பார்த்து வைக்கும் சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்கிறார் எஸ்.வி.சேகர். அதன்பிறகு, தனது எட்டு கண்டிஷன்களுக்கும் அவள் சற்றும் பொருத்தமானவள் இல்லை என்று தெரிந்ததும், வேறு வழியில்லாமல் அவளுடனேயே 34 வருடங்கள் வாழ்ந்து விடுகிறார். 35 வருடங்களுக்கு பிறகு மணல் கயிறு 2-ம் பாகத்தில் எஸ்.வி.சேகருக்கு திருமண வயதில் பெண் இருக்கிறாள். அவள்தான் பூர்ணா. திருமணத்தில் பூர்ணாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. எந்நேரமும் பிசினஸிலேயே பிசியாக இருக்கிறாள். இந்நிலையில், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்ய சம்மதிக்கும் பூர்ணா, தனது அப்பா போலவே தனக்கு வரும் மாப்பிள்ளை தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் ஒத்துப்போனவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறாள். தனக்கு பெண் பார்த்த விசுவையே தனது பெண்ணுக்கும் மாப்பிள்ளை ...