
காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் குறையாத மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் – கோடங்கி விமர்சனம் 3.5/5
இருட்டும் அதில் ஒளிந்திருக்கும் குற்றங்களும், விசாரணைகளும் தான் "மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்" கதையாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு ஏரியாவில் இரவில் துவங்குகிறது கதை. வரலெட்சுமியின் காதலரான மகத் ஒரு க்ரைம் நடப்பதை பார்க்கிறார். பார்த்ததை போலீஸிடம் போய் சொல்கிறார். அதனால் மகத்திற்கு ஒரு ஆபத்து நிகழ்கிறது. அது என்ன ஆபத்து? அவர் பார்த்த க்ரைம் என்ன? அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? மகத் தப்பித்தாரா? வரலெட்சுமி என்ன ரியாக்ட் செய்தார்? சந்தோஷ் பிரதாப், ஆரவ் ஆகியோரின் பங்கு என்ன? என பல கேள்விகளுக்கு நல்ல திருப்பங்களோடு மினிமம் கியாரண்டி தரும் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன்.
போலீஸ் கேரக்டருக்கு பக்கா பொருத்தம் வரலெட்சுமி சரத்குமார்.
அவர் வசனம் பேசும் காட்சிகளை விட வசனம் இல்லாத காட்சிகளில் மிரட்டுகிறார். பல இடங்களில் கண்கள் பேசுகிறது. கலகத்...