வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31
Shadow

’லோகா – அத்தியாயம் 1 :  சந்திரா’ கோடங்கி விமர்சனம் 4/5

 

 

’லோகா – அத்தியாயம் 1 :  சந்திரா’ விமர்சனம் 4/5

 

தென்னிந்திய சினிமாவில் சூப்பர் மேன் ஜானர் திரைப்படங்கள் என்பது மிக மிக அரிதானது. அதோடு இதுபோன்ற சூப்பர் ஹீரோ படங்களை ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து ரசித்த நமக்கு இயக்குநர் டொமினிக் அருண் மிக அருமையாக கொடுத்த படம்தான் . ’லோகா – அத்தியாயம் 1 :  சந்திரா’

கதைப்படி…

அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பெங்களூர் நகரத்திற்கு வருகிறார். பேக்கரி ஒன்றில் பணியாற்றும் அவர் தங்கியிருக்கும அடிக்குமாடி குடியிருப்புக்கு எதிரே இருக்கும் வீட்டில் வசிக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோருக்கு கல்யாணி மீது ஈர்ப்பு வருகிறது.

அதே சமயம், அதே பகுதியில் மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடும் கும்பலால் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியும், சூப்பர் பவர் கொண்ட கல்யாணியும் மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

கல்யாணி யாரையாவது கடித்தால் அவர்களும் சூப்பர் பவர் மனிதர்களாக மாறிவிடுவார்கள். இந்த சூழலில் கலயாணியால் கடி படும் சாண்டியும் சூப்பர் பவர் ஹீரோ ஆகிறார். அவரால் அங்கு என்ன குழப்பம் நடக்கிறது? கல்யாணி பிரியர்தஷன் என்ன ஆகிறார்? ஏன் அவர் அங்கு வருகிறார்? கடைசியில் என்ன ஆகிறது எனபதை எல்லாம் விடை சொல்லாமல் எதிர்பார்ப்போடு முதல் பாகத்தை முடிக்கிறது ’லோகா – அத்தியாயம் 1 :  சந்திரா’

 

சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அதீத சக்திகள் படைத்த சூப்பர் பவர் பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் மிரட்டுகிறார். அதிகம் பேசவில்லை என்றாலும், தனது உடல் மொழிகள் மூலம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருந்தி தனது கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் கொண்டாடும் விதத்தில் நடித்திருக்கிறார் கல்யாணி. இனி ஆக்‌ஷன் படங்கள் கல்யாணியை விடாமல் விரட்டினாலும் ஆச்சர்யம் இல்லை.

சந்திரா கவர்ச்சியால்  கவர்ந்திழுக்கப்படும் இளைஞர்களாக நடித்திருக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் மூலம் கதை நகர்த்தப்படுவதோடு, அவர்களது நடை உடை பாவனைகள் மூலம் பல இடங்களில் சிரிக்கவும் வைத்து ரசிக்கவும் வைக்கிறார்கள். குறிப்பாக, சந்திராவை பின் தொடர்ந்து, அவர் யார் ? என்பதை நேரில் பார்க்கும் நஸ்லனின் நடிப்பு சிரிப்பு சரவெடிக்கு கியாரண்டி.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் சாண்டியிடம் இப்படிப்பட்ட குரூர வில்லத்தனம்… அட அட மிரள வைக்கிறது.

சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் மற்றும் திரையில் தோன்றாத பெரியவர் கதாபாத்திரங்கள் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் திரைக்கதையில் கையாளப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் கோணங்கள் மற்றும் வண்ணங்கள் படத்தை பிரமாண்டமானதாக மட்டும் இன்றி படத்தை தரமானதாகவும் கொடுத்திருக்கிறது.

கலை இயக்குநர் பங்கலானின் பணி, சண்டைப்பயிற்சி இயக்குநர் யானிக் பென்னின் சண்டைக்காட்சிகள், வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் என அனைத்துமே மிக தரமாக ஆங்கில படம் பார்க்கிற உணர்வை தருகிறது.

அதீத சக்தி படைத்த சூப்பர் மேனாக கதாபாத்திரங்களை சித்தரித்து, அதன் மூலம் ஒரு மிகப்பெரிய சூப்பர் மேன் உலகத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் டொமினிக் அருண், சந்திரா என்ற முதல் அத்தியாயத்தை மிக சிறப்பாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக சந்திராவின் சிறுவயது பாதிப்பு, அங்கிருந்து அவர் அதீத சக்தி படைத்த பெண்ணாக உருவெடுப்பது, அவரது அடுத்தடுத்த பயணங்கள் ஆகியவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைக்கும் விதத்தில் இருக்கிறது.

ஆங்கில படங்களில் சூப்பர் ஹீரோ காட்சிகளை பார்த்து ரசித்த நமக்கு நமது மொழியிலேயே அழகான ராட்ச்சியை கொடுத்து சபாஷ் பெறுகிறார் இயக்குனர்.

மொத்தத்தில்   ’லோகா – அத்தியாயம் 1 :  சந்திரா’ அனைவரும் ரசிக்கும் படமாக மட்டுமல்ல வசூலை வாரி குவிக்கும் படமாகவும் இருக்கும்.

 

கோடங்கி 4/5

 

 

44 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன