வியாழக்கிழமை, ஆகஸ்ட் 5
Shadow

நடிகைகள்

மதுபோதையில் கார் ஓட்டினேனா? – மவுனம் கலைத்த யாஷிகா!

மதுபோதையில் கார் ஓட்டினேனா? – மவுனம் கலைத்த யாஷிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  மதுபோதையில் கார் ஓட்டினேனா? - மவுனம் கலைத்த யாஷிகா! மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாஷிகா மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாகவும், அதனால் விபத்தில் சிக்கியதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில், இதுகுறித்து நடிகை யாஷிகா விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது: “சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். கார் ஓட்டும்போது நான் மது அருந்தி இருந்ததாகப் புரளிகளைக் கிளப்பும் மலிவான நபர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நான் மது அருந்தவில்லை என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. அப்படி நான் மது அருந்தி இருந்தால் இப்போது மருத்துவமனையில் இருந்திருக்க மாட்டேன், சிறையில் தான் இருந்திருப்பேன். போலியான நபர்களால் போலி செய்திகள் பரப்பப்படுவது நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. ஆனால், இது மிகவும் ...
பிக்பாஸ் பிரபலங்களுக்கு உதவும் சூர்யா!

பிக்பாஸ் பிரபலங்களுக்கு உதவும் சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிக்பாஸ் பிரபலங்களுக்கு உதவும் சூர்யா! மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படத்தை ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷனும், லாஸ்லியாவும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்...
மீண்டும் தமிழில் கவனம் செலுத்தும் சாய் பல்லவி!

மீண்டும் தமிழில் கவனம் செலுத்தும் சாய் பல்லவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மீண்டும் தமிழில் கவனம் செலுத்தும் சாய் பல்லவி! மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்து பிரபலமான சாய்பல்லவிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழில் தனுசுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே. படங்களில் நடித்தார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க சென்றார். தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, ராணாவுடன் விராட பருவம், நானியுடன் ஷியாம் ஷிங்க ராய் ஆகிய 3 படங்கள் கைவசம் உள்ளன. பவன் கல்யாணுடன் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழில் 2019 மே மாதம் வெளியான என்.ஜி.கே படத்துக்கு பிறகு சாய்பல்லவிக்கு படங்கள் இல்லை. முழுக்க தெலுங்கு படங்களிலேயே கவனம் செலுத்தினார். இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வருகிறார். கதாநாயகியை மையமாக வைத்து தயாராகும் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். சாய்பல்லவியுடன் நடிக்கும் நடிகர், நடிகை...
சூர்யாவை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி!

சூர்யாவை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சூர்யாவை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி! பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. இந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிப்பதோடு இயக்கவும் உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது....
ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!

ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்! ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, விக்ரம் பிரபு, திரிஷா, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதுச்சேரியில் ஷூட்டிங்கில் இருக்கும் சரத்குமாரை பார்ப்பதற்காக அவரின் மகள்களான வரலட்சுமியும், பூஜாவும் சென்றுள்ளனர். அங்கு ...
முயற்சிகள் பலனளிக்கவில்லை… கணவரை பிரிந்தார் மியா கலிஃபா!

முயற்சிகள் பலனளிக்கவில்லை… கணவரை பிரிந்தார் மியா கலிஃபா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
முயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா! ஆபாச திரைப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலிஃபா. இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது பள்ளி காதலனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2020 மார்ச் மாதம் அறிவித்திருந்தார். கொரோனா பிரச்சனை காரணமாக இருவரும் எளிமையான முறையில் வீட்டிலே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர். இந்நிலையில், நாங்கள் இருவரும் பிரிந்து வெவ்வேறு பாதையில் செல்ல திட்டமிட்டுள்ளதாக மியா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மியா கலிஃபா கூறியுள்ளதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எங்களது திருமண உறவை தக்கவைத்துக் கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. அத...
கார் விபத்து – நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கார் விபத்து – நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
கார் விபத்து - நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் நேற்று நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார். அப்போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அவர் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகை யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகை யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்...
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி!

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி! குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்த ஷாலினி, கடந்த 1997- ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரவேண்டும் என பல திரைப்படங்களில் நடித்தார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினிக்கும் அஜித்துக்கு இடையே காதல் மலர்ந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும் ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணம் முடிந்த பிறகு நடிகை ஷாலினி படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஷாலினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ...
பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா… வைரலாகும் புகைப்படம்!

பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா… வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா... வைரலாகும் புகைப்படம்! பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார். பின்னர் வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை வனிதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் ச...
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்!

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்! மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதில் முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார். இதனால் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பாண்டிச்சேரி சென்று உள்ளனர். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளர். இங்கு நடைபெறும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அனைவரும் ஐதராபாத் செல்ல இருக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் படத்தின் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது....