தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.
இவருடைய 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' சார்பில் தற்போது கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16' படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடித்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், அவருடைய நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும...
மகேஷ்பாபு நடிக்கும், SSMB28 உலகம் முழுதும் ஜனவரி 13, 2024 அன்று வெளியாகிறது!!!
சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் இணையும் SSMB28 திரைப்படம், ஜனவரி 13, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது !!
தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் திரைக்கதை வித்தைக்காரர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் ஹாட்ரிக் பிளாக்பஸ்டராக உருவாகி வருகிறது SSMB28. இந்த முறை, கதையின் களம், மேக்கிங், தொழில்நுட்பம், மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் என அனைத்துமே முந்தைய இரண்டு படங்களை விட அட்டகாசமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும்.
இப்படத்தில் மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பைப் மெருகேற்றி, இதுவரையில் காணாத மகேஷ்பாபுவை ர...
3 கோடியில் உருவாகி 15 கோடியை தொட்ட இராவண கோட்டம்!
திரைக்கதை ம்ன்னன் பாக்யராஜ் மகன் சாந்தனு - கயல் ஆனந்தி ஜோடி நடிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் உருவான படம் இராவண கோட்டம்.
இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்தார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் கடந்த வாரம் நடை பெற்றது.
தமிழக சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்கள், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து துபாய் சென்று விழாவில் கலந்து கொண்டது இதுதான் முதல் முறை.
திரையுலக வரலாற்றில் இடம் பெற்ற இந்த இராவண கோட்டம் படத்திற்கான பட்ஜெட் தலை சுற்றிப் போகும் அளவுக்கு பல மடங்கு எகிறியுள்ளாது திரையுலகில் பெரும் பேசு பொருளாக மாற உள்ளது.
தமிழ்கத்தின் வறண்ட நிலப்பரப்பான இராமனாதபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கருவேலங்காட்டு கதையை தொட்டு உருவாகியுள்ள இந்த இர...
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப்பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.
ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.
நேற்று ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பொம்மன், பெள்ளி ஆகியோரும் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து மும்பை சென்றனர்.
நேற்று மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.
விழா முடிந்ததும் அவர்கள் உடனடியாக நேற்று மாலையே மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்ப...
தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள்
முதன்முறையாக தேசிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்
லாபத்துடன் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை
தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது.
இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தேசிய பங்கு சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவரான கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தகத்திற்...
இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க உள்ளார்.
'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை மார்ச் 31 அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள்.
பாரதிரா...
*லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் - ஐஷ்வர்யா ராஜேஷ் - ஷிவதா இணையும் 'தீராக் காதல்'*
நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து கு...
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகி றார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.
அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். ஏற்னவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள...
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.
குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில், இந்த பாடலின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மல்லிப்பூ' பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்...