புதன்கிழமை, மார்ச் 29
Shadow

NEWS

முதன்முறையாக தேசிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்

முதன்முறையாக தேசிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் முதன்முறையாக தேசிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் லாபத்துடன் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது. இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தேசிய பங்கு சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவரான கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தகத்திற்...
உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை- பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை- பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகி றார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். ஏற்னவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள...
சர்வதேச மகளிர் தினம் – மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்த சுதா்சன் பட்நாயக்!

சர்வதேச மகளிர் தினம் – மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்த சுதா்சன் பட்நாயக்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, உலகம் முழுவதும் மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சி தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் என பலரும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தொிவித்து வருகின்றனா். இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து மகளிர் தின வாழ்த்தை தொிவித்துள்ளாா்....
சர்வதேச மகளிர் தினம்- பிரதமர் மோடி வாழ்த்து!

சர்வதேச மகளிர் தினம்- பிரதமர் மோடி வாழ்த்து!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி பெண்களுக்கு தனது வாழத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்....
பாலியல் வழக்கு: அதிமுக கவுன்சிலர் சிகாமணி கட்சியில் இருந்து நீக்கம்!

பாலியல் வழக்கு: அதிமுக கவுன்சிலர் சிகாமணி கட்சியில் இருந்து நீக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (வயது 44). இவர் பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க.கவுன்சிலராக உள்ளார். இவரும், அவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமதுவும் (36) சேர்ந்து காரில் அந்த மாணவியை ஏற்றி சென்றுள்ளனர். பின்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த மாணவியை சிகாமணி, ராஜா முகமது மற்றும் பரமக்குடி புது நகரை சேர்ந்த பிரபாகரன் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை அந்த மாணவியை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், சிகாமணி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமக்குடி புது நகரை சேர்ந்தவர்களான கயல்விழி (45), அன்னலட்சும...
உக்ரைனின் பக்முத் நகரை  கைப்பற்றிய ரஷியா!

உக்ரைனின் பக்முத் நகரை கைப்பற்றிய ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டு இருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. குறிப்பாக கிழக்கு உக்ரைனை முழுமையாக தன்வசப்படுத்த ரஷியா முயற்சித்து வருகிறது. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. அதை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் சண்டையிட்டு வருகிறது. பக்முத் நகரில் ரஷிய படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களால் அந்நகரம் முற்றிலும் அழிந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்தது. இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் மிக நெருக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பல மாத சண்டைக்கு பிறகு பக்முத் நகரம், ரஷியா வசம் செல்லும் நிலையில் உள்ளதாகவும், அந்நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ரஷியாவின்...
அமோக வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் – தொண்டர்கள் உற்சாகம்!

அமோக வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் – தொண்டர்கள் உற்சாகம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே சென்றது. இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனும் பின்தங்கினர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இறுதிச் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டா...
ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை!

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்....
மத்திய பிரதேசத்தில் பட்ஜெட் தாக்கல்: பெண்களுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு!

மத்திய பிரதேசத்தில் பட்ஜெட் தாக்கல்: பெண்களுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. அரசு இப்போதே தயராகி வருகிறது. இந்த நிலையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பில் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தது அரசு. நிதி மந்திரி ஜெகதீஷ் தேவ்தா 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தேர்தல் வருவதால், இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பட்ஜெட்டில், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு ரூ.459 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான முதலமைச்சரின் ஸ்கூட்டி திட்டத்தையும் மாநில அரசு முன்மொழிந்துள்ளது, இதன் கீழ் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என நிதிமந்திரி அறிவித்துள்ளார். பழங்குடி...
போதைப் பொருள் விழிப்புணர்வை முன்னிட்டு கைப்பந்து போட்டி!

போதைப் பொருள் விழிப்புணர்வை முன்னிட்டு கைப்பந்து போட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மீஞ்சூர் அடுத்த காட்டூர் ஊராட்சியில் காட்டுப்பள்ளி அதானி பவுண்டேஷன் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பொது மக்களிடையே கையெழுத்து மற்றும் ஒரு நாள் கைப்பந்து போட்டி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதானி போர்ட் டெர்மினல் தலைவர் ராம்தேவ் கரன்சியாபாவனா, கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார். இதில் திட்ட மேலாளர் ஜேசுராஜ், காட்டூர் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஊராட்சி மன்ற தலைவர்கள், செல்வராமன், முத்து, கோபி, தொகுப்பாளர் செண்பகவள்ளி மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்....