மொத்தம் 26 கட்சி.. பாஜகவுக்கு எதிராக பெங்களூரில் உருவான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி "INDIA, 38 கட்சிகளுடன் NDA கூட்டணி.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் இணைந்து 2வது கட்டமாக இன்று பெங்களூரில் சோனியா காந்தி தலைமையில் தீவிர ஆலோசனை நடந்தது. புதிய கூட்டணி உருவாகி உள்ளது. மேலும் அந்த கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 2வது நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைவால் இந்த கூட்டம் ஒரு மணிநேரம் தாமதமாக துவங்கியது.
நேற்றைய ஆலோசனையில் பங்கேற்காத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்பட இன்ன...
வாய்க் கொழுப்பில் பேசி சர்ச்சையில் சிக்கி நீதிமன்றம் காலில் விழுந்து பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆடிட்டர் குருமூர்த்தி!
நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால் கிரிமினல் அவதூறு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018ல் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அப்போதைய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. அப்போது பாஜக ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி பதிவிட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குருமூர்த்தியின் இந்த ட்வீட்டுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கத்தினர் டெல்லி உயர் நீதிமன...
பெரம்பலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசு தலைவர் தான் தலைவராக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டமே அதை தான் உறுதிப்படுத்துகிறது.
புதிதாக பாராளுமன்ற கட்டிடம் கட்டியுள்ள நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின் போது அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது குடியரசு தலைவரும் அழைக்கப்பட...
சர்ச்சைக்குரிய ஆடியோ தொடர்பாக, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வீடியோ மற்றும் அறிக்கை வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும், முக்கிய நிதி சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை, வெறும் இரண்டே ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம். அதனால்தான் இதனை திராவிட மடல் ஆட்சி என்று கூறுகிறோம். திராவிட மாடலை ஜீரணிக்க முடியாத சிலர்தான் இதுபோன்ற மலிவான தந்திரங்கள் கொண்ட போலியான ஆடியோ ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த தலைமுறையின் நம்பிக்கை உதயநிதி ஸ்டாலின். எனக்கு சபரீசன் மிகவும் நம்பகமான ஆலோசகர். நான் பேசியதாக வெளியான ஆடியோ ஒளிப்பதிவு முழுக்க முழுக்க சித்தரிக்கபப்ட்டவை. இதுபோன்ற ஒலிப்பதிவுகள் உலக அளவில் கிடைக்கின்றது...
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு பிரதமர் மோடி பெண்களுக்கு தனது வாழத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்....
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.
துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே சென்றது.
இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனும் பின்தங்கினர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இறுதிச் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டா...
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். கனிமொழி எம்.பி. ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார். இவர்களைத் தவிர தி.மு.க அமைச்சர்கள் எம்.எல்.ஏக்.கள், தேர்தல் பணி குழுவினர் வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதே போல் காங்கிரஸ் தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோர் ஆதரவு திரட்டினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாள...
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்கி வருகிறார்.
பிரதமர் மோடியை விமர்சித்தும் வருகிறார். "அதானி உடனான உறவு என்ன என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும், அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தி வருகிறார்.
பிரதமர் மோடி, தனது நண்பர் அதானியை பாதுகாக்கிறார் எனவும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் நேற்று அவர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு தனது பட்ஜெட்டில் பணவீக்கம் பற்றி பேசுவதுகூட இல்லை.
வேலையில்லா திண்டாட்டம் பற்றி குறிப்பிடக்கூட இல்லை. ஏனென்றால், பிரதமர் பணவீக்கத்தையும் சரி, வேலையில்லா திண்டாட்டத்தையும் சரி கண்டுகொள்வதே இல்லை.
பிரதமர் மோட...