“கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்”.. வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
“தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்”.. வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
40,944 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "கலைஞர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களது இன்னல்களை குறைக்கவும் 1989ல் நல வாரியம் உருவானது.
கருணாநிதி இந்த வாரியத்தை தொடங்கிய போது முதலில் அலுவலர் உறுப்பினர்களாக 20 பேர் இருந்தார்கள்.
...