
தமிழ் நாட்டில் அதிரடி சுற்றுப்பயண திட்டத்தில் ராகுல்காந்தி!
தமிழ் நாட்டில் அதிரடி சுற்றுப்பயண திட்டத்தில் ராகுல்காந்தி!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். அவரது சுற்றுப்பயணத்தின் முழு விவரம் வருமாறு:-
ராகுல்காந்தி 23-ந் தேதி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். பிற்பகல் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்கிறார். கோவையில் அவருக்கு சென்னியம்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிற்பகல் 3.15 மணிவரை திறந்த வேனில் சென்று மக்களை சந்திக்கிறார்.
மாலை 5.15 மணிக்கு திருப்பூர் செல்லும் ராகுல்காந்திக்கு அவிநாசி புது பஸ் நிலையம் அருகே வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து திருப்...