அழுத்தமான அரசியல் பேசியிருக்கும் விடுதலை பாகம் 2 திரைவிமர்சனம்
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் விடுதலை பாகம் 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன்
இதில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷேhர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், வின்சென்ட் அசோகன், சேதன், இளவரசு, தமிழ், சரவண சுப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வெற்றி மாறனின் விடுதலைப் பகுதி 1 முடிவடைந்த இடத்திலிருந்து விடுதலைப் பகுதி 2 தொடர்கிறது. விஜய் சேதுபதி ஒரு சக்தி வாய்ந்த வாத்தியார் பெருமாள் உருவமாக காட்டப்பட விடுதலைப் பகுதி 2 -ல் புரட்சித் தலைவர் பெருமாள் உருவாக கடந்த வந்த பாதைகளின் சாரம்சமாக தொகுத்து அதை சூரி தன் தாய்க்கு கடிதம் வாயிலாக நடந்த சம்பவங்களை விவரித்து எழுதும் குரல் வடிவமாக பின்னணியில் வழங்கியுள்ளார்.
காவலர் குமரேசன் (சூரி) உதவியுடன் புரட்சித் தலைவரான பெருமாள் (விஜய...