
ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜி.பி. ஜெயராமனைக் கைது செய்யுங்கள் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை காவல்துறையின் பாதுகாப்பில் வையுங்கள் என நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனைக் காவல் சீருடையிலேயே போலீசார் கைது செய்தனர். தற்போது போலீசார் விசாரணையில் ஜெயராமன் உள்ளார்.
குற்ற வழக்கில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தன்னை கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயராமன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருக்கிறது.

 
                            
