வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31
Shadow

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை சஸ்பென்ட் செய்ய பரிந்துரை!

 

புரட்சிப் பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. தொடர்புடைய சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராமிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை உடனே கைது செய்யவும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் ஏடிஜிபி ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் ஜெயராமிடம் நேற்று இரவு முதல் விடிய விடிய திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே ஏடிஜிபி ஜெயராமை சஸ்பென்ட் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த சஸ்பென்ட் நடவடிக்கைக்குப் பின்னர் ஜெயராமை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

 

81 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன