‘ரெட்ட தல’ விமர்சனம் 3/5
‘ரெட்ட தல’ விமர்சனம் 3/5
படத்தின் பெயருக்கேற்ப அருண்விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.ஒருவர் வறுமையில் வாழ்பவர்.இன்னொருவர் பெரும் பணக்காரர்.வறுமையில் வாழும் அருண்விஜய் பணக்காரரை கொன்றுவிட்டு அந்த இடத்துக்குப் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்புடன் சொல்ல முயன்றிருக்கிறது படம்.
இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண்விஜய் அதற்காக மெனக்கெட்டிருக்கிறார்.தோற்றம் மற்றும் உடைகளில் மட்டுமின்றி நடிப்பிலும் நுட்பமான வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிகமாக மெனக்கெட்டிருக்கும் அருண் விஜய், திரைக்கதை தொய்வு அடையும் இடங்களில் தனது நடிப்பு மூலம் தொய்வில் இருந்து மீட்டு விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, கதையின் மையப்புள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், திரைக்கதையில் எந்தவித பாதிப்பையும...









