விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் படத்தின் முதல் சிங்கிளான “சொல்லிடுமா” பாடல் ரிலீஸ்!
விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் படத்தின் முதல் சிங்கிளான "சொல்லிடுமா" பாடல் வெளியானது
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி அவர்களின் 12வது தயாரிப்பான ககன மார்கன் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான "சொல்லிடுமா" பாடலை வழங்குவதில் படக்குழுவினர் பெருமை அடைகிறார்கள். விஜய் ஆண்டனியே இசையமைத்துப் பாடியிருக்கும் இந்த பாடல், அனைத்து வயதினரையும் சுண்டி இழுக்கும் வகையில் Energetic மற்றும் vibe ஆன பாடலாக அமைந்துள்ளது.
வசீகரிக்கும் பாடல் வரிகளைக் கொண்டு "சொல்லிடுமா" பாடல் இசையமைக்கப் பட்டிருக்கிறது.இசையமைப்பாளராகவும், பாடகராகவும் விஜய் ஆண்டனி மீண்டும் தனது தனித் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுப்பதோடு மட்டுமல்லாமல் படத்தின் வெளியீடு எப்பொழுது என்ற எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.
பிரபல எடிட்டரான லியோ ஜான் பால் இ...