வீடியோ

விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடிக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ படம்

விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடிக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், வீடியோ
மொழிமாற்றுப் படங்களை தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவர் A.N.பாலாஜி . சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி.சவுத்ரி தயாரித்த படங்களின் தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கியவர்,பின்னர் மொழிமாற்று திரையீட்டு தொழிலுக்கு மாறினார். லவ் டுடே முதல் ரகளை வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தெலுங்கில் தயாரித்த படங்களை வியாபாரம் செய்தவர். சூப்பர் குட் நிறுவனத்தை கோவில் என்றும் சவுத்ரியை கடவுள் என்றும் நன்றியோடு நினைப்பவர். மகேஷ் பாபுவின்'பிசினஸ் மேன்' ,'நம்பர் ஒன்',பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்,நயன்தாரா படங்கள் மற்றும் நாகார்ஜூனாவின் 10படங்கள், சைதன்யா படங்கள் என வளரந்து இப்போது  விஜய் தேவரகொண்டா படங்களை மொழிமாற்றி வெளியிட்டு வருகிறார்.  அந்த வரிசையில் மார்ச்  15ஆம் தேதி வெளியாகிறது விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடித்த 'அர்ஜூன் ரெட்டி' படம்.  இது 'துவாரகா' தெலுங்கு படத்தின் தமிழ் வடிவம் .
90ML ஓவியாவின் மரண மட்ட குத்தாட்ட பாடல் ரிலீஸ்..!

90ML ஓவியாவின் மரண மட்ட குத்தாட்ட பாடல் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90ml படத்தின் மரண மட்ட வீடியோ பாடல் வெளியானது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை ஓவியா நடித்துத்திருக்கும் முதல் திரைப்படம் 90ml. அடல்ட் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் வரும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் அகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நியூ இயர் ஸ்பெஷல் பாடலான மரண மட்ட குத்து பாடல் வெளியானது. சிம்பு மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து எழுத்தியுள்ள இப்பாடலை ஓவியா மற்றும் ஹரிஷ் கல்யாண் பாடியுள்ளனர். https://youtu.be/Nuq3qkIcLIA