டிரைலர்கள்

வித்தியாசமான ஜிவி  கதையுடன் மீண்டும் களத்துக்கு வரும் வெற்றி..!

வித்தியாசமான ஜிவி கதையுடன் மீண்டும் களத்துக்கு வரும் வெற்றி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
8 தோட்டாக்கள் வெற்றி பெற்ற பிறகு கதை தேர்வில் மிக கவனம் செலுத்தி நடிகர் வெற்றி தேர்வு செய்த படம் ஜிவி. மிக வித்தியாசமான திரைக்கதையுடன் இந்த முறையும் ரசிகர்களுக்கு நல்ல டிரீட் கொடுக்க காத்திருக்கிறது ஜிவி. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானது. மிக ஷார்ப்பாக எடிட் செய்யப்பட்ட டீசரை பார்க்கும் போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதாக ஏற்படுகிறது. இந்த படம் 28ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது.   https://youtu.be/7Q4VTDove4k
வாரீசு அரசியலை கேள்வி கேட்கும் யோகிபாபுவின் “தர்மபிரபு”

வாரீசு அரசியலை கேள்வி கேட்கும் யோகிபாபுவின் “தர்மபிரபு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் தர்மபிரபு படத்தின் டீசர் வெளியானது. டீசரில் வாரீசு அரசியலை வெளுத்து வாங்கும் வசனங்கள் இடம் பெற்று உள்ளது. வாரீசு அரசியல்தான் தமிழகத்தை பல ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகிறது. அதனால் யாரை குறிப்பிடுகிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் போல... எது எப்படியோ யோகிபாபு அரசியல் பேசுகிறார். https://youtu.be/AKAq7iDUxrs
அமலாபால் முழு நிர்வாணமாக நடித்த ஆடை பட டீசர்..!

அமலாபால் முழு நிர்வாணமாக நடித்த ஆடை பட டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், நடிகைகள்
ஆடை படத்தில் அம்மணமாக... அதாவது முழு நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அமலாபால். இதுவரை தமிழ் நடிகைகள் யாருக்கும் இல்லாத துணிச்சல் முயற்சி இது. இதற்கு முன் நடிகர் கமல்ஹாசன் ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்திருப்பார். அதன் பின் பாய்ஸ் படத்தில் இப்படி ஒரு நிர்வாண காட்சி வரும். நடிகைகள் கிளாமருக்காக ஆடையை குறைத்து உடல் அங்கங்கள் தெரிய கவர்ச்சியாக நடிப்பது வழக்கம். ஆனால் படத்துக்காக அதிலும் மிக சென்சிட்டிவாக தான் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றப்பட்டு முழு நிர்வாணமாக ஒரு அறைக்குள் அடைக்கப்படும் அமலாபால் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார். உடலை மறைக்க ஆடையாக எதை உடுத்தி கொள்கிறார் என்பது மிக அதிர்ச்சி ரகம். இந்த காட்சிகளோடு வெளியான ஆடை பட டீசர் இணையத்தில் வைரலாக ஹிட் அடித்தது. https://youtu.be/gd6E2XgRoww
அஜீத் வசனம் பேசும் விகரம் மகனின் ஆதித்ய வர்மா..!

அஜீத் வசனம் பேசும் விகரம் மகனின் ஆதித்ய வர்மா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத் வசனம் பேசும் விகரம் மகனின் ஆதித்ய வர்மா..! தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். விக்ரம் மகன் துருவ் அறிமுக படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. படம் முடிந்து பாடல்கள் வெளியான நிலையில் திடீரென படம் கைவிடப்பட்டது. பாலா காரணம் கூறாமல் விலகினார். இதைத் தொடர்ந்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் புது ஷூட்டிங் தொடங்கியது. இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசர் முடிவில் அஜீத் பேசும் "நெவர் எவர் கிவ் அப்" என டயலாக் பேசுகிறார் விக்ரம் மகன் துருவ்.   https://youtu.be/-kzOQPafU8c
ரசிகர்களை கவர்ந்த கார்த்தியின் கைதி டீசர்..!

ரசிகர்களை கவர்ந்த கார்த்தியின் கைதி டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கதைகளில் கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டும் கார்த்தியும், ’சித்திரம் பேசுதடி’ நரேன் இணைந்து நடித்து வரும் கைதி படத்தின் டீசரை படத்தை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2017ல் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படம் பாராட்டுக்களை குவித்தது. மேலும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி வருகிறார். டிரீம் வாரியர் சார்பில் பிரபு தயாரிக்கிறார். https://youtu.be/KPndTU16k7c லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் "கைதி" படத்தில் கார்த்தியுடன் ’சித்திரம் பேசுதடி’ நரேன், யோகி பாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர், ’தலைவாசல்’ விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
‘மான்ஸ்டர்’ எலியிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா

‘மான்ஸ்டர்’ எலியிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘மான்ஸ்டர்’ எலியிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார். பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. எலியால் ஏற்படும் விபரீதமும், எலியிடம் சிக்கித் தவிப்பவராகவும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.     https://youtu.be/kqQHZ2Ni5jA