Tuesday, September 22
Shadow

செய்திகள்

ராமநாதபுரத்தில் முதல்வர் எடப்பாடி ஆய்வு

ராமநாதபுரத்தில் முதல்வர் எடப்பாடி ஆய்வு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ராமநாதபுரத்தில் முதல்வர் ஆய்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். மீன்பிடி தொழிலும் ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்படுகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகள் நல்ல பலன் கிடைத்துள்ளது - முதலமைச்சர். குடிமராமத்து பணிகளால் பருவகால மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை. ஆர்.எஸ். மங்கலம் கண்மாய் நவீனப்படுத்தப்பட்டுள்ளது - முதலமைச்சர்....
தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பிய காதல் ஜோடி!

தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பிய காதல் ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு கேரளா போன நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி அப்படியே கோவா போய் ஒரு டிரிப் அடித்து விட்டு மீண்டும் தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார்கள். இப்போது இணையம் முழுக்க நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி கை பிடித்து விமானத்தில் இருந்து இறங்கி வரும் படங்கள் தான் பரவி வைரலாகி வருகிறது.   ...
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் விடிய விடிய தர்ணா!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் விடிய விடிய தர்ணா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இரவு முழுவதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிய 8 சஸ்பெண்ட் எம்பிக்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய தர்ணா. ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்டதாக 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒ பிரைன், சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 எம்பிக்கள் விடிய விடிய போராட்டம். போராடும் எம்பிக்களுக்கு காலையில் தேநீர் கொண்டு வந்தார் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ்.   ...
மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் போராட்ட அறிவிப்பு பிரதமர் ஆதரவு

மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் போராட்ட அறிவிப்பு பிரதமர் ஆதரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் போராட்ட அறிவிப்பு, பிரதமர் ஆதரவு * மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் * மாநிலங்களவையில் நடந்த சம்பவம் காரணமாக 2 நாள் மன உளைச்சல்-ஹரிவன்ஸ் * காந்தி சிலை முன்பு ஒருநாள் போராட்டம் * தன்னை அவமதித்தவர்களுக்கும் தேநீர் வழங்க ஹரிவன்ஷ் முன்வந்தது அவரது மகத்துவத்தை காட்டுகிறது. * மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷை வாழ்த்துவதில் நாட்டு மக்களுடன் இணைகிறேன் - பிரதமர் மோடி....
மத்திய , மாநில அரசுகளை  எதிர்த்து 28ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மத்திய , மாநில அரசுகளை எதிர்த்து 28ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய , மாநில அரசுகளை எதிர்த்து 28ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், கொரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன. தற்போது, 3-வது முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே இன்று   தோழமை கட்சிகளின் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.  இந்த ஆலோசனைக்குப் பிறகு, வேளாண் மசோதாவுக்கு எதிராக வரும் 28 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தோழமை கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "நாடாளுமன்ற நெறிமு...
சூர்யா கொடுத்த 30 லட்சத்தை நீதிபதியிடம் தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு வழங்கியது!

சூர்யா கொடுத்த 30 லட்சத்தை நீதிபதியிடம் தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு வழங்கியது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது . மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு உத்தரவிட்டது . இந்நிலையில் OTT மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில் சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக வழங்கினார் . அந்த தொகையை தாணு, தலைமையில்  கே ஆர் ,  K. முரளிதரன் ,  KJR ராஜேஷ் ஆகியோர் அடங்கிய குழு  நீதிபதி அவர்களிடம் ஒப்படைத்தது . தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில் சூர்யா தந்த இந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள் . சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி தெரிவி...
நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் –  நடிகர் சூர்யா

நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் – நடிகர் சூர்யா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் - நடிகர் சூர்யா நீட் தேர்வு அச்சத்தால் சமீபத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா, ' உயிருக்கு பயந்து வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிடுகிறது' என விமர்சித்திருந்தார். இதைத்தொடர்ந்து, நீதிமன்றங்களை தவறாக விமர்சித்ததாக நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 13-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதம் கடந்த 14 -ம் தேதி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்புக்காக அனுப்பப்பட்டது.   இதனை ஆய்வு செய்த தலைமை வ...
SPB எழுந்து உட்கார்ந்தார் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் மகன் மகிழ்ச்சி!

SPB எழுந்து உட்கார்ந்தார் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் மகன் மகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மகன் எஸ்பிபி சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்த வீடியோ வெளியிட்டு வருகிறார். அதன்படி, இன்று (செப்டம்பர் 19) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- எனது அப்பா எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார். அவர் நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார். மருத்துவர்கள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எழுந்து உட்காருகிறார். அவருக்கு தொடர்ந்து மருத்துவக்குழு தீவிர சிச...
பிரதமர் பிறந்த நாள் விழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் கேஸ் பலூன்கள்!

பிரதமர் பிறந்த நாள் விழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் கேஸ் பலூன்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  சென்னை பாடியில் பா. ஜ. கா. விவசாய அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. நிகழ்ச்சியில் இரண்டாயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது விவசாய அணி துணை தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பொறி பலூன் மீது பட்டத்தில் பலூன்கள் வெடித்து சிதறியது. இதில் அருகில் நின்றுகொண்டிருந்த அனைவருக்கும் தீ காயங்கள் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட அனைவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். மேலும் இதில் அருகிலிருந்த செய்தியாளர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... ...