வெள்ளிக்கிழமை, அக்டோபர் 10
Shadow

ராமாபுர மெட்ரோ பால விபத்து CMRL, L&T நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்!

 

ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி  இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் உள்ள L&T தலைமை அலுவலகம் அருகே,  75 டன் எடை கொண்டஇரண்டு I-கிர்டர்கள் திடீரென இடிந்து விழுந்தன.

இந்த விபத்தில், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சி. ரமேஷ் (43), பில்லிங் மெஷின் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியராக பணிபுரிந்தவர், தனது இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, கான்கிரீட் கிர்டர்களுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார்.

மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, விபத்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், கட்டுமானத்தில் ஏற்பட்ட பிழைகளால் கிர்டர்கள் இடிந்ததாகவும், ஒப்பந்ததாரரான L&T நிறுவனத்தின் கவனக்குறைவு மற்றும் தற்காலிக A-பிரேம் ஆதரவு அமைப்பில் ஏற்பட்ட தோல்வியே விபத்துக்கு முக்கிய காரணம் என்றும் கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, CMRL, L&T நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது. மேலும், விபத்துக்கு நேரடியாக பொறுப்பான L&T-யின் முதன்மை பாதுகாப்பு மேலாளர் (ESHS), மூத்த ESHS மேலாளர், பாதுகாப்பு பொறியாளர், மற்றும் பொது ஆலோசகரின் (General Consultant) மூத்த துணை குடியிருப்பு பொறியாளர் ஆகிய நான்கு பொறியாளர்கள் மெட்ரோ திட்டப் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

உயிரிழந்த ரமேஷின் குடும்பத்துக்கு CMRL சார்பில் ரூ.5 லட்சமும், L&T நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சமும் உடனடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டன.

நந்தம்பாக்கம் காவல்துறை, L&T நிறுவனம் மற்றும் திட்ட மேலாளர்கள் மீது பாரதிய நியம சட்டம் (BNS) பிரிவு 105 (கொலைக்கு ஒப்பான கவனக்குறைவு) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது

84 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன