ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 28
Shadow

sports

சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ்

சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ்

HOME SLIDER, sports
சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ் 3 வது கர்நாடக ஓபன் ட்ரையோஸ் டென்பின் பந்துவீச்சு போட்டியில், தமிழகத்தை சேர்ந்த டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கர்நாடக மாநில டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ் சார்பில் நடத்தப்பட்ட 3 வது கர்நாடக ஓபன் ட்ரையோஸ் டென்பின் பந்துவீச்சு போட்டி, பெங்களூர் சர்ச் ஸ்ட்ரீட் அமீபாவில் நடைபெற்றது. நவம்பர் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், கர்நாடகம், தமிழ்நாடு, மகராஷ்டிரா, குஜராத், ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா, உத்தர் பிரதேஷ், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து 36 அணிகள் பங்கேற்றன. இத்தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய, அக்ரமுல்லா பெய்க், ஹபீபுர் ரஹ்மான் மற்றும் உமேஷ் குமார் ஆகியோர் அடங்கிய தமிழ்நாட்டை சேர்ந்த ட்ரைடெண்ட் சூப்பர் கிங்ஸ், 211 உடன் முதல் ஆட்டத்தை முடித்து, 24 பின்...
சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு- அரசாணை வெளியீடு!

சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு- அரசாணை வெளியீடு!

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு- அரசாணை வெளியீடு! தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் சிறந்த சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டசபையில் அரசு அறிவித்தது. சிலம்பம் விளையாட்டை 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் மாநில அளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இந்த இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். மத்திய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது....
ஹர்திக் பாண்டியாவின் ரூ.5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பறிமுதல்!

ஹர்திக் பாண்டியாவின் ரூ.5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பறிமுதல்!

HOME SLIDER, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஹர்திக் பாண்டியாவின் ரூ.5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பறிமுதல்! இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கைக்கடிகாரம் கட்டப்பட்டும், பையில் ஒரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது. இவை இரண்டும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என்றும் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இரண்டு கைக்கடிகாரங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு கைக்கடிகாரங்களும் துபாயில் இருந்து வாங்கிய பட்சத்தில், அவற்றிற்கான ரசீது எதுவும் அவரிடம் இல்லை என்பதால், ஹர்திக் பாண்டியா மீது சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது....
நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் சி.எஸ்.கே வீரரின் தங்கை!

நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் சி.எஸ்.கே வீரரின் தங்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள், விளையாட்டு செய்திகள்
நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் சி.எஸ்.கே வீரரின் தங்கை! நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர்கள் தயாரிக்கும் புதிய படம் ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் இயக்குகிறார். சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்த கேகே, இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தியும் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மல்தி சாஹர் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக் சாஹரின் தங்...
கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்! டி20 உலக கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ரோகித் சர்மா- கே.எல். ராகுல் அல்லது இஷான் கிஷன்- கே.எல். ராகுல் ஆகியோரில் ஏதாவது ஒரு ஜோடி களம் இறங்கும் என ரசிகர்களும், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி சர்ப்ரைஸ் அளித்தது. கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோரை தொடக்க வீரர்களாக களம் இறக்கினார் விராட் கோலி. இது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மேலும், நியூசிலாந...
பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
  பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்   ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதல் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 60 ரன்னும் எடுத்தார். ஹெட்மையர் 37 ரன்கள் அடித்தார். ரிஷாப் பண்ட் 51 ரன் எடுத்து அவுட்டாகாமால் இருந்தார். சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டும் ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டுபிள...
பேட்டிங் சொதப்பல்: டெல்லிக்கு 130 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்!

பேட்டிங் சொதப்பல்: டெல்லிக்கு 130 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
பேட்டிங் சொதப்பல்: டெல்லிக்கு 130 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்! ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 7 ரன்கள் சேர்த்தார். டி காக் 19 ரன்னில் வெளியேறினார். இதுவரை சரியாக விளையாடாத சூர்யகுமார் யாதவ் இன்று நம்பிக்கையுடன் விளையாடினார். இருந்தாலும் 26 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் மந்தமான நிலையிலேயே உயர்ந்தது. சவுரப் திவாரி 15 ரன்னிலும், பொல்லார்டு 6 ரன்னில் ஆட்டமிழந்தனர். 6-வ...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன்! அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் மற்றும் நோவக் ஜோகோவிச் விளையாடினர். இந்த போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய மெட்வடேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  இதனால், கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்....
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இவான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் மெட்வதேவ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இவான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் மெட்வதேவ்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இவான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் மெட்வதேவ்! கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வதேவும், பிரிட்டனின் டேன் இவான்சும் மோதினார்கள். தொடக்கம் முதலே மெட்வதேவ் சிறப்பாக விளையாடினார். முதல் செட்டை 6-3 என மெட்வதேவ் கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-4, மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றி அசத்தினார். இறுதியில், மெட்வதேவ் 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்....
3வது டி20 போட்டி – வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து!

3வது டி20 போட்டி – வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
3வது டி20 போட்டி - வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து! நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வங்காளதேசம் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிகோலஸ் 36 ரன்னும், டாம் பிளெண்டல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், வங்காளதேசம்  19.4 ஓவரில் 76 ரன...