வெள்ளிக்கிழமை, அக்டோபர் 10
Shadow

மிராய்’ கோடங்கி விமர்சனம் 3.5/5

 

‘மிராய்’ கோடங்கி விமர்சனம் 3.5/5

 

புராண கால வரலாற்றுக் கதையையும் ஆன்மீகமும் மந்திர தந்திர டெக்னாலஜியும் சேர்ந்த ஒரு பேண்டசி திரைப்படமாக ரசிகர்களை கவரும் படமாக மிராய் உருவாகியுள்ளது.

கதைப்படி…

கலிங்கத்து போர் நடந்த பின் பேரரசன் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை  9 மாய புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். இந்த 9 மாய  புத்தகங்களை தீயவர்கள் யாரும் கைபற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார்.

இது நடந்து முடிந்து பல சகாபதங்கள் முடிந்த பின், தற்போதைய நவீன காலக்கட்டத்தில், மந்திர தந்திர சக்திகள் மூலம் ஒட்டு மொத்த உலகையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கும் மனோஜ் மஞ்சுவுக்கு இந்த புத்தக ரகசியம் தெரிந்து அந்த 9 புத்தகங்களை அடைய முயற்சிக்கிறார்.

அதில் 8 புத்தகங்களை கைப்பற்றிய மனோஜ் 9வது புத்தகத்தை அடைய வருகிறார். அந்த சூழலில் தன் சக்தி என்ன என்பதையே தெரிந்து கொள்ளாமல் ஜாலியாக பிடித்த தொழிலை செய்து வரும் ஹீரோ தேஜாவை தேடி ஹீரோயின் வந்து மிராய் சக்தி பற்றியும், ஹீரோவின் அம்மா சொல்லிக் கொடுத்த மந்திரம் பற்றியும் ஹீரோவிடம் சொல்கிறார். ஹீரோவின் அம்மா யார்?   மிராய் என்ற சக்தியை ஹீரோ கைப்பற்றினாரா? வில்லன் அந்த 9வது புத்தகத்தை கைப்பற்றிவிடாமல்  ஹீரோ எபடி தடுத்தார்? எனபதை பிரமாண்டமாக சொல்வது தான் மிராய் கதை.

நாயகன் தேஜா சஜ்ஜா, மிராய் கதைக்கு கன கச்சிதமாக பொருந்திப் போகிறார். தன்னை அநாதை என நினைத்திருக்கும் ஹீரோவுக்கு அம்மா யார் என தெரிய வரும் சூழலிலும், தனது சக்தியை தெரிந்து கொள்ளும் போதும் , சாதாரண நபராக இருக்கும் போதும் என இரண்டு பரிணாமங்களிலும் ஹீரோ அப்ளாஸ் வாங்குகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் மனோஜ் மஞ்சு கவனிக்க வைக்கிறார். 9 புத்தகங்கள் மூலம் சாகாவரம் பெற்று இந்த உலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கும் சூழலிலும், மனிதர்களை அடக்கி ஆளத்தெரிந்த திறமையான அனைவரும் கடவுள் தான் என சொல்லும் காட்சிகளிலும் அசத்தி இருக்கிறார்.

நாயகி ரித்திகா நாயக் அழகாக இருப்பதோடு வந்த காட்சிகளில் எல்லாம் தனி முத்திரை பதித்து தனியிடம் பிடித்து கொள்கிறார்.

ஹீரோவின் இளம் வயது தாயாக நடித்திருக்கும் ஸ்ரேயா, முனிவராக நடித்திருக்கும் ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு என அனைவரும் மனசில் நிற்கிறார்கள்.

மிக பிரமாண்டமான படதிற்கு இசையமைப்பாளர் கெள்ரா ஹரியின் பாடல்களும், பின்னணி இசையும் மிக நன்றாகவே பலம் சேர்த்திருக்கிறது.

சண்டைக்காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி அமைந்துள்ளதோடு ஹீரோ வாங்கி வைத்திருக்கும் கார்,பஸ் என ஒவ்வொன்றுக்கும் ஒரு பின் கதை அழகு.

படத்தின் மிகப்பெரிய பலம் கார்த்திக் ஒளிப்பதிவு. அவரின் கேமராவின் கோணங்கள் அனைத்தும்  ஒரு கதாபாத்திரமாகவே திரையில் வலம் வந்து ஆச்சர்யப்படுத்துகிறது.

இதுன்ற புனைவு கதைகளில் கலை இயக்குநர் பங்கு மிக அவசியம். ஸ்ரீ நாகேந்திர தங்கலாவின் செட் ஒவ்வொன்றும் மிரட்டுவதோடு வசனம் பேசாத கதாபாத்திரங்களாக கதை சொல்கிறது.

ஆன்மீகத்தையும் பேசி, நவீனத்தையும் வரலாற்று கதையையும் சொல்லி புராண காலத்தையும் கலந்து போர் அடிக்காமல் படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் கவனிக்கும் இயக்குனராக மாறியிருக்கிறார்.

மொத்தத்தில் ரசிகனின் சிந்தனையை சிதற விடாமல் மிரட்டும் புராண கால நவீன ஃபேண்டஸி படம் தான் மிராய்.

கண்டிப்பாக தியேட்டரில் தான் பார்த்து ரசிக்க முடியும். கண்டிப்பாக ரிப்பீட் ஆடியன்சுக்கு வாய்ப்பு உண்டு.

 

கோடங்கி 3.5/5

54 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன