‘தணல்’ கோடங்கி விமர்சனம் 3/5
ஒரு என்கவுண்டர் அதன் பின் நடக்கும் சம்பவங்கள், காவல் துறையில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பே தணல்.
கதைப்படி…
காவல்துறையில் புதிதாக காவலர்களாக சேரும் நாயகன் அதர்வா உள்ளிட்ட 6 பேர் ரோந்து பணிக்கு அனுப்பபடுகிறார்கள். அப்போது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயற்சிக்கும் போது, அவர் தப்பித்து ஓடுகிறார். அவரை பின் தொடர்ந்து ஓடும் ஆறு பேரும், ஆள் நடமாட்டம் இல்லாத குடிசைப்பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கு அஷ்வின், தலைமையிலான ஒரு குழுவுக்கும் அதர்வா உள்ளிட்ட மற்ற காவலர்களுக்கும் திடீர் மோதல் ஏற்படுகிறது. அதன் பின் என்ன ஆகிறது? வில்லன் யார்? போலீசாரை ஏன் வில்லன் தாக்குகிறார் என்ற கேள்விகளுக்கான பதிலை பரபரப்பாக அதிரடி ஆக்ஷன் கலந்து சொல்வதே ‘தணல்’.
படத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கும் அத்ர்வா, ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுவதோடு, உயிர் பிழைப்பதற்காக வில்லன்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகளில் உயிர் பயத்தையும், நண்பர்களை காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தை தன் நடிப்பிலும் காண்பித்து சபாஷ் பெறுகிறார்.
படத்தின் வில்லனாக இருந்தாலும், கதையின் நாயகனுக்கு சமமான இடத்தை பிடித்திருக்கும் அஷ்வின் கதாபாத்திரமும், அவர் உருவமும் வெளிப்படுத்திய நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
ஹீரோயின் லாவண்யா திரிபாதிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அவர் தொடர்பான சில காட்சிகளால் நானும் இருக்கேன் என சொல்லாமல் சொல்கிறார். .
லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி, பாரத், ஷர்வா, தாஃபிக், பிரதீப் கே.விஜயன், ஷாரா, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட் என கதாபாத்திரங்களை திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் இணைத்திருக்கிறார் இயக்குனர்.
சக்தி சரவணனின் ஒளிப்பதிவு குறிப்பாக இரவின் இருட்டும் கேமராவின் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலம்
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அசத்தல் மிரட்டல் ரகம். ஒரே இடத்தில் நகரும் கதைக்கு தன் பின்னணி இசை மூலம் வித்தியாசத்தை வெளிப்படுத்தி திரைக்கதையை எந்த இடத்திலும் தொய்வடையாமல் நகர்த்திச் சென்றிருக்கிறார் ஜஸ்டின்பிரபாகர்.
சென்னையில் எப்போதோ நடந்த உண்மை என்கவுண்டர் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு, விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா,
மொத்தத்தில் தணல் ரசிக்கலாம்.
கோடங்கி 3/5