செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

‘வீரவணக்கம்’ கோடங்கி விமர்சனம் 3/5

வீரவணக்கம் கோடங்கி விமர்சனம் 3/5

 

இல்லாத பல விஷயங்களையும், மிகைப்படுத்தி பல விஷயங்களையும் சொன்ன கேரளா ஸ்டோரிக்கு டப் கொடுக்கும் விதமாக அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் வாழ்க்கை வரலாற்று டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”.

சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய நிலைமையை விட மோசமான ஒடுக்குமுறை சுதந்திரத்திற்கு முன்பும் அதற்கு பிறகும் எப்படி தலைவிரித்து ஆடியது என்பதை மிக யதார்த்தமாக சொல்ல இயக்குனர் முயற்சித்து இருக்கிறார்.

தமிழகத்திலும், கேரளத்திலும் உண்மையில் வாழ்ந்து ஒடுக்கு முறைக்கு எதிராக போராடிய ஆளுமையான P கிருஷ்ணபிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் கதையை இந்த படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

சமுத்திரகனி வழக்கம் போல தனது மேம்பட்ட நடிப்பை கொடுத்து படத்தின் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கிறார். இதுவரை பார்க்காத ஒரு கதாபாத்திரமாக பரத் நடித்திருக்கிறார்.

காட்சிகளும், பாடல்களும் ஒரு வரலாற்று படத்திற்கு என்ன தர முடியுமோ அந்த உண்ர்வை கொடுக்க முயன்று இருக்கிறது.

M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் ஆகியோர் இசையில் காலகட்ட்த்தை பிரித்து பார்க்க முடிகிறது. பழம்பெரும் பாடகர் T.M. சௌந்தர்ராஜன் அவர்களின் மகன் TMS செல்வகுமார் பாடல் கதைக்கு வலு சேர்க்கிறது.

இது போன்ற வாழ்க்கை வரலாற்று கதைகளை எடுக்கும் போது காட்சிகளுக்கு வலு சேர்ப்பதோடு கமர்சியல் அடையாளத்திற்காக இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால் நிஜமாக வீர வணக்கம் செலுத்தி இருக்கலாம்.

வரலாற்று பதிவுகளை விரும்பும் ரசிகர்களுக்கு வீரவணக்கம் சரியான தேர்வு.

 

கோடங்கி 3/5

134 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன