சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

குற்றம் புதிது கோடங்கி விமர்சனம் 3/5

 

 

குற்றம் புதிது கோடங்கி விமர்சனம் 3/5

 

கொலை அதிலும் வித்தியாசமாக ரசித்து செய்யும் கொடூர கொலை கிரைம் த்ரில்லர் படங்களை ரசிக்கிறவர்களுக்காக வந்திருகிற படம் தான் குற்றம் புதிது.

நோவா ஆம்ஸ்டாங் இயக்கிய இந்த படத்தில் தருண்விஜய், ஜேஷ்விதா கனிமொழி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

கதைப்படி ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் மகள் காணாமல் போகிறார்… அவர் கடத்தப்பட்டாரா? என்ன ஆனார் என போலீஸ் தேடும் போது அந்த பெண்ணின் கை விரலும், ரத்த மாதிரிகளும் கிடைக்கிறது.

இந்த சூழலில் ஒரு வாலிபன் தான் கொலை செய்து விட்ட்தாக போலீசில் சரண்டர் ஆகிறார். அதிலும் ஒரு கொலை இல்லை 3 கொலை செய்ததாக சொல்கிறார். அதிலும் கொடூராமாக கொன்றதாக சொல்கிறார். அதிர்ந்து போன போலீஸ் அவர் சொல்கிற இடங்களில் தேடுகிறது.

ஆனால் எங்கும் உடல் கிடைக்கவில்லை. அதற்கு மாறாக யாரை கொலை செய்ததாக அந்த வாலிபன் சொல்கிறாரோ அவர்கள் 2 பேரும் உயிருடன் இருக்கிறார்கள். இந்த சூழலில் கட்த்தப்பட்டு கொல்லப்பட்ட்தாக சொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மகள் உயிருடன் கிடைக்கிறார்.

அந்த வாலிபன் ஏன் அப்படி சொன்னான்? உண்மையில் கொல்லப்பட்டது யார்? எதற்காக? இதற்கான விடையை மிக புதுசாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் நோவா.

ஹீரோ தருண் விஜய் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல மிக கொடூரமாகவும், இயல்பான காதல் காட்சிகளிலும் அசத்தி இருக்கிறார்.

இவருக்கு டப் கொடுக்கும் விதமாக ஜேஷ்விதா கனிமொழி கண்களாலேயே பேசி அசத்துகிறார். காதலனை காப்பாற்ற அவர் எடுக்கும் குரூர அவதாரம் அடடா  போட வைக்கிறது.

ஹீரோயின் அப்பாவான போலீஸ் அதிகாரி மதுசூதன்ன் நடிப்பு அத்தனை அபத்தம். மகள் கொல்லப்பட்ட்தாக வரும் தகவலில் தேமேவென இருப்பதும் கொலையாளியை தேடும் போலீஸ் அதிகாரியாக செல்ப் எடுக்காமல் வருவதும் கடுப்பை ஏற்படுத்த கடைசி கிளைமாக்சில் அட இப்படி கூட இவருக்கு டிவிஸ்ட் இருக்கா என சொல்ல வைக்கிறார் இயக்குனர்.

கதை தொடங்கி முதல்பாதிவரை பரபரக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் “கடுப்பேத்றாங்க மை லார்ட்” ஆக பயணித்து அடப்பாவிகளா இதுக்காடா இவ்ளோ பில்டப்பு குடுத்தீங்கன்னு சொல்ல வைத்து முடிக்க வைக்கிறார் இயக்குனர்.

இது போன்ற கதைக்கு தேவையான பின்னணி இசையை கரண் பி கிருபா கொடுத்தாலும், சில இடங்களில் அதே சத்தம் மைனசாகவும் இருக்கிறது. இது போன்ற கிரைம் த்ரில்லர் கதைகளில் லாஜிக் இருக்காது என்பதால் அதை உறிப்பிட வேண்டாம்.

மொத்தத்தில் குற்றம் புதிது படத்தைப்பற்றி சொல்லணும்னா… மறுபடியும் மொத பத்தியை படிக்கவும்!

 

கோடங்கி 3/5

133 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன