வியாழக்கிழமை, அக்டோபர் 30
Shadow

இதுவரைக்கும் தமிழ் சினிமா… இல்ல இல்ல உலக சினிமாவிலேயே சொல்லாத கதைதான் சார் டியூட்… கோடங்கி

கொப்புறான் சத்தியமா இது விமர்சனமல்ல…

இயக்குனர்: இதுவரைக்கும் தமிழ் சினிமா இல்ல இல்ல உலக சினிமாவிலேயே சொல்லாத கதைதான் சார் டியூட்….

ஹீரோ: அப்படி என்ன லைன்…  சொல்லுங்க…

இயக்குனர்: ஓப்பன் பன்னதும் கலர்புல்லான ஒரு கல்யாண சீன் சார்…

ஹீரோ: அட ஆரம்பமே மங்களகரமா இருக்கே… மேல சொல்லுங்க…

இயக்குனர்: அந்த கல்யாணத்துக்கு நீங்க ரேபிடோ பைக்ல போய் மூஞ்சையே காட்டாம போய் இறங்குறீங்க சார்…

ஹீரோ: ஆரம்பமே வேற லெவல் ப்ரோ… மேல…

இயக்குனர்: அது உங்க எக்ஸ் லவ்வரோட கல்யாணம் சார்…

ஹீரோ: பிரமாதம் ப்ரோ… மேல…

இயக்குனர்: மேடைக்கு போய் கிப்ட் குடுக்க வரிசையில நிக்குறீங்க… அத உங்க எக்ஸ் பார்த்துட்டு ஷாக் ஆகுறாங்க சார்…

ஹீரோ: அட்டகாசம் போங்கோ… மேல… மேல…

இயக்குனர்: உங்க டர்ன் வந்ததும் மாப்ள கிட்ட சொல்லிட்டு கல்யாண பொண்ண தனியா கூப்பிட்டு “என்ன ஏன் கழட்டீ விட்ட காரணத்த சொல்லு”ன்னு மெதுவா கேக்குறீங்க சார்… எக்ஸ் எந்த பதிலும் சொல்லாம திரும்பிப்போக டிரை பன்றாங்க சார்… அந்த நேரம் பாத்து  நீங்க கைய நீட்டி அவங்க தோள புடிச்சி “ஏண்டி என்ன கழட்டி விட்ட காரணத்த சொல்லு”ன்னு மறுபடியும் சொல்றீங்க சார்… ஆனா நீங்க மெதுவா சொல்றதா நெனச்சிகிட்டு சத்தமா கத்த… மண்டபமே ஷாக் ஆகி மேடைய பாக்குதுசார்… அதே நேரம் நீங்க கைய நீட்டி எக்ஸ் தோள புடிக்கிறதுக்கு பதிலா… காலையில அவ கழுத்துல கட்டியிருந்த புது தாலிக்கயிற புடிச்சிட்டீங்க சார்… இத எதிர்பாக்காம உங்க எக்ஸ் விலக… அந்த தாலி அறுந்து உங்க கையில வந்துடுது சார்…

ஹீரோ: அடப்பாவி… வந்தவன் எல்லாம் என்ன துரத்தி துரத்தி அடிப்பானே…

இயக்குனர்: ஆமா சார்… நீங்க கையில தாலிய புடிச்சிகிட்டே சாரி கேட்டுகிட்டே அங்கயும் இங்கயும் ஓடிகிட்டே இருக்கீங்க… உங்களை கல்யாணத்துக்கு வந்தவனெல்லாம் துரத்தி துரத்தி அடிகிறான் சார்….

ஹீரோ: அப்பறம்…

இயக்குனர்: வழக்கம் போல போலீஸ் வந்து அரஸ்ட் பன்னுது சார்… உங்க மாமா பொண்ணு ஸ்டேசனுக்கு வந்து உங்களை மீட்குது சார்…

ஹீரோ: மாமா பொண்ணா…

இயக்குனர்: ஆமா சார்… அமைச்சர் பொண்ணு… இந்த கேரக்டர் தான் படத்தோட டுவிஸ்ட்டே…

ஹீரோ: ஓ அப்படியா… ம்…  மேல

இயக்குனர்: அந்த மாமா பொண்ணு உங்கள லவ் பன்னுது சார்… ஆனா நீங்க லவ் பன்னல… இதுனால அந்த பொண்ணு கோச்சிகிட்டு வெளி நாட்டுக்கு போயிடுது சார்… கூடவே இருந்தவ இல்லாம போனதும் உங்களுக்கும் அவங்க மேல லவ் வருது சார்… அத உங்க அமைச்சர் மாமா கிட்ட சொல்றீங்க சார்…

ஹீரோ: அப்பறம் என்ன எங்க 2 பேருக்கும் அமைச்சர் மாமா கல்யாணம் பன்னி வைக்கிறார்… அப்படிதான சார்..

இயக்குனர்: அதான் இல்ல சார்… அங்கதான் இன்னொரு டிவிஸ்ட்…

ஹீரோ: கல்யாணத்துல என்ன சார் டிவிஸ்ட்டு…

இயக்குனர்: வெளி நாட்டுல இருந்து வந்த உங்க மாமா பொண்ணுக்கு உங்க மேல ஏற்கனவே இருந்த லவ் போயி… இன்னொருத்தர் மேல லவ் வந்துடுச்சி… அந்த காதல அமைச்சர் அப்பா ஏத்துக்கல… அதுக்கு காரணம் அந்த லவ்வர் கீழ்ஜாதி பையன் சார்… ஏற்கனவே அமைச்சர் தங்கச்சி இப்படி கீழ் ஜாதி பையன லவ பன்னதால அவள அமைச்சர் கொன்னு போட்டத சொல்ல வைக்றோம் சார்…

இப்படி இங்க ஒரு ஜாதி விஷயத்த மெதுவா டிவிஸ்ட் பன்றோம் சார்…

ஹீரோ: புரிஞ்சி போச்சி சார்… மாமாவுக்கு புடிக்காத கீழ் ஜாதி பையனுக்காக பிளான் பன்ன கல்யாணத்த ஹீரோ நிறுத்திட்டு காதலனோட மாமா பொண்ண சேத்து வைக்கிறார்… எப்படி கண்டுபுடிச்சேன் பாருங்க… சரி படம் போய்கிட்டே இருக்கே இன்ட்ரவல் எப்ப விடுவீங்க…

இயக்குனர்: சார் நீங்க சொன்னது பாதி உண்மை… காதலனோடு சேத்து வைக்குறது இருக்கு… அதுக்கு முன்னாடி உங்களுக்கும் உங்க மாமா பொண்ணுக்கும் கல்யாணம் நடக்குது.   தாலி கட்றீங்க… இன்ட்ரவல் கார்டு போடுறோம்…. ஓப்பனிங்க தாலி அறுத்தீங்க… பர்ஸ்ட் ஆப் முடியும் போது தாலி கட்றீங்க… ஆடியன்ஸ் தெறிப்பாங்க சார்…

ஹீரோ: அப்படியா சொல்ற… அப்ப அந்த லவ்வர் நிலம…

இயக்குனர்: செகண்ட் ஆப் தொடங்குனதும் நீங்க தாலி கட்டுன உங்க மனைவி அந்த தாலிய கழட்டிட்டு அவ காதலனோட ஓடிப்போறா… அவ ஓடிப்போறதுக்கு நீங்க தான் ஹெல்ப் பன்றீங்க…

ஹீரோ: என்ன ப்ரோ… ரொம்ப கேவலாமா இருக்குமே…

இயக்குனர்:  சார்… என்ன சார் நீங்க… இப்ப இதான் டிரண்டு… அவன் காதலிய இவன் உசார் பன்றது… நண்பன் பொண்டாட்டிய லவட்டிகிட்டு போறது… நண்பன்னு வீட்டுக்குள்ள விட்டா காதல் பொண்டாட்டிய நண்பனே கரெக்ட் பன்னிகிட்டு ஓடிப்போறது… இத பாத்துட்டு ஜென்சி கிட்ஸ் எல்லாம் உங்கள தூக்கி வைச்சி கொண்டாடுவாங்க சார்…

ஹீரோ: ம்… சரி மேல சொல்லு…

இயக்குனர்: ஓடிப்போன உங்க மாமா பொண்ணுக்கு ஒரு குழந்தையும் பொறந்துடுது…   ஜாதி வெறி புடிச்ச அமைச்சர் மாமா திருந்தி பொண்ண சேத்துகிட்டாரா? எப்பவோ பன்ன ஆணவ கொலைக்கு மாமா தண்டன அனுபவிச்சாரா?  ஹீரோ என்ன ஆகுறார் இதெல்லாம் கிளைமாக்ஸ்ல சொல்றோம் சார்…

ஹீரோ: சரியா வருமா டியூட் இந்த கதை…

இயக்குனர்: சார் 100 பர்சண்ட் இதான் கதை… தலைப்பையும் ”டியூட்”னே வைச்சிடலாம்.. வெளிய பேசும் போது ஆணவ கொலைக்கு எதிரா கதை சொல்லி இருக்கோம்னு அள்ளி வுடுறோம்… கலெக்‌ஷன அள்றோம்… சார்..

எனக்கு தெரிஞ்சி பிரதீப் கத கேக்கும் போது இயக்குனர்  கீர்த்தி இப்படிதான் சொல்லியிருக்கனும். சொன்ன மாதிரியே ஒரு கேவலமான லைன எடுத்து மேக் பன்னி ரிலீசும் பன்னி 100 கோடிக்கு மேல வசூலும் பன்னி… இந்த படத்தை ரசிக்கும் ஜென்சி கிட்சை என்ன சொல்ல…

 

கோடங்கி

187 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன