மியாவ் விமர்சனம்
ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் இவர்கள் நான்கு பேரும் பெரிய பணக்காரர்கள் என்பதால் தினமும் குடியும், கும்மாளமுமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் அந்த குடியிருப்பில் தங்கியிருக்கும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதையும் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரியை இவர்கள் கிண்டல் செய்ய, அவள் நண்பர்களில் ஒருவரை அடித்து விடுகிறாள். இதனால், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஊர்மிளாவை பழிவாங்க துடிக்கிறார்கள். அன்றிலிருந்து நண்பர்களில் ஒருவன் திடீரென கொல்லப்படுகிறார். அந்த கொலையை செய்தது ஒரு பூனை என்று அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் நம்புகிறார்கள்.
ஆனால், கொல்லப்பட்டவனின் நண்பர்களோ இதற்கு ஊர்மிளாதான் காரணம் என்று அவள்மீது பழியை போடுகிறார்கள். இந்த கொலை விசாரணை போல...

