திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Author: Kodanki

பிறந்தநாள் வாழ்த்து

செய்திகள்
  இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை - இயக்குனர் திருமதி.லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சென்னை ராயல் சினிமா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
பலே வெள்ளையத் தேவா விமர்சனம்

பலே வெள்ளையத் தேவா விமர்சனம்

விமர்சனம்
  பலே வெள்ளையத் தேவா விமர்சனம் நாயகன் சசிகுமார் படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா ரோகிணி போஸ்ட் மாஸ்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், ரோகிணிக்கு மதுரை பக்கத்தில் உள்ள வயலூர் என்ற கிராமத்திற்கு பணி மாற்றம் வருகிறது. அந்த ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் வளவன், எந்த வீட்டிலும் டிஷ் ஆன்டெனா மாட்டக்கூடாது என்றும் தனது கேபிள் டி.வி.யையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அராஜகம் செய்து வருகிறார். இதனால், அந்த ஊரில் யாரும் டிஷ் ஆன்டெனா வாங்குவதே கிடையாது. அதே ஊரில், கறிக்கடைக் காரர் பாலா சிங்கின் மகளான நாயகி தான்யா, மகளிர் சுயஉதவிக் குழுவில் பணியாற்றுகிறார். இவரை சசிகுமார் ஒருதலையாக காதலிக்கிறார். அதே ஊரில் வசிக்கும் கலகலப்பான தம்பதிகளான கோவை சரளாவையும், சங்கிலி முருகனையும் கைக்குள் போட்டுக் கொண்டு நாயகியை பின் தொடர்கிறார் சசிகுமார்....
கத்தி சண்டை விமர்சனம்

கத்தி சண்டை விமர்சனம்

விமர்சனம்
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. அதற்கு அடுத்த காட்சியில் நாயகன் விஷால் என்ட்ரி ஆகிறார். அப்பாவியாக வரும் நாயகன் விஷால், நாயகி தமன்னாவைக் காதலிக்க அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தி தனது தங்கையின் மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார் ஜெகபதி பாபு. திடீரென ஜெகபதி பாபுவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அந்த கும்பல் ஜெகபதி பாபுவிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கவில்லையென்றால் உனது குடும்பத்திற்கு தான் பாதிப்பு என அந்த கும்பல் ஜெகபதி பாபுவை மிரட்ட, அவர் விஷாலுக்கு போன் செய்து வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள டைல்ஸ்க்கு அடியில பணம் இருக்கு எடுத்து வா எனக் கூறுகிறார். ஜெகபதி பாபு கூறியதுபோல பணத்தை எடுத்து செல்லும் விஷால் பணத்தைக் கொடுக்காமல் வில்லன்களிடம் சண்டை போட்டு ஜெகபதி பாபுவைக் காப்பா...
மணல் கயிறு 2 விமர்சனம் 

மணல் கயிறு 2 விமர்சனம் 

விமர்சனம்
மணல் கயிறு 2 முதல் பாகத்தில் திருமண புரோக்கராக வரும் விசுவிடம் எட்டு கண்டிஷன்கள் போட்டு, அவர் பார்த்து வைக்கும் சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்கிறார் எஸ்.வி.சேகர். அதன்பிறகு, தனது எட்டு கண்டிஷன்களுக்கும் அவள் சற்றும் பொருத்தமானவள் இல்லை என்று தெரிந்ததும், வேறு வழியில்லாமல் அவளுடனேயே 34 வருடங்கள் வாழ்ந்து விடுகிறார். 35 வருடங்களுக்கு பிறகு மணல் கயிறு 2-ம் பாகத்தில் எஸ்.வி.சேகருக்கு திருமண வயதில் பெண் இருக்கிறாள். அவள்தான் பூர்ணா. திருமணத்தில் பூர்ணாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. எந்நேரமும் பிசினஸிலேயே பிசியாக இருக்கிறாள். இந்நிலையில், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்ய சம்மதிக்கும் பூர்ணா, தனது அப்பா போலவே தனக்கு வரும் மாப்பிள்ளை தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் ஒத்துப்போனவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறாள். தனக்கு பெண் பார்த்த விசுவையே தனது பெண்ணுக்கும் மாப்பிள்ளை ...
பறந்து செல்ல வா விமர்சனம் 

பறந்து செல்ல வா விமர்சனம் 

விமர்சனம்
  தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி செல்கிறார் நாயகன் லுத்புதீன் பாட்ஷா. அங்கு நண்பன் சதீஷ், ஆனந்தி ஆகியோருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்து வேலை தேடி வருகிறார். எந்த பெண்ணை பார்த்தாலும் உடனே காதல்வயப்படும் லுத்புதீன், அந்த பெண்ணிடம் சென்று தன்னை காதலிக்குமாறு கேட்பது வழக்கம். இதனால், இவருடன் தங்கியிருக்கும் பெண்கள் இவரை எப்போதும் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால், தான் யாரையாவது காதலிப்பதுபோல் அவர்களிடம் காட்டி வாயை அடைக்க முடிவு செய்கிறார். இதற்காக, வழியில் கிடக்கும் பேப்பரில் அவர் பார்த்த நார்லே கேங்க்கை தனது ஜோடியாக தேர்வு செய்கிறார். பின்னர் ஆர்.ஜே.பாலாஜியின் ஆலோசனையை கேட்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, அந்த பெண்ணின் பெயரில் போலி பேஸ்புக் பக்கத்தை ஒன்றை உருவாக்கி, அதில் லுத்புதீனும், நார்லேவும் சேர்ந்து இருப்பதுபோல் புகைப்படங்களை உருவாக்கி பதிவு செய்கிறார். இதையெல்லாம் பார்...
நேர்முகம் விமர்சனம்

நேர்முகம் விமர்சனம்

விமர்சனம்
சிறு வயதில் தாயை இழந்து சித்தி கொடுமைக்கு ஆளான ஆதித்யா மேனன், ஒரு மனோதத்துவ மருத்துவர். இவர் சொந்தமாக கிளினிக் ஒன்றை வைத்திருக்கிறார். இவருக்கு பெண்கள் என்றால் சுத்தமாக பிடிக்காது. அவரிடம் சிகிச்சைக்கு வரும் இளம் ஜோடிகளை இவர் பல நாள் அடித்து உதைத்து, அவர்களை பலவிதங்களில் பயமுறுத்தி பிரித்து அனுப்புகிறார். இந்நிலையில், இவரிடம் நாயகன் ரஃபியும், அவரது காதலியான நாயகி மீனாட்சியும் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்த மருத்துவமனைக்கு வந்த பிறகு ஆதித்யா மேனன் அடைத்து வைத்துள்ள பல ஜோடிகளில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், காணாமல் போன காதல் ஜோடிகளை பாண்டியராஜன் தலைமையிலான போலீஸ் குழு தேட ஆரம்பிக்கிறது. இறுதியில், காதல் ஜோடிகளை அடைத்து வைத்திருக்கும் ஆதித்யா மேனனை சட்டத்தின் முன் நிறுத்தியதா? அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜோடிகளை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடித்தார...

தங்கல் – திரை விமர்சனம்

விமர்சனம்
அரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மல்யுத்தத்தில் சாதித்து நாட்டுக்கு பல பதக்கங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. தேசிய அளவில் மல்யுத்தத்தில் சாதிக்கும் அமீர்கான் தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் அடுத்த நிலையை எட்ட முடியாமல் போகிறது. எனவே, திருமணத்திற்கு பிறகு தனக்கு பிறக்கப் போகும் மகனையாவது மல்யுத்தத்தில் சாதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால், அவருக்கோ அடுத்தடுத்து பிறக்கும் நான்கு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பெண் குழந்தைகளால் மல்யுத்தத்தில் சாதிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு தனது ஆசை நிறைவேறாத வருத்தத்தில் இருக்கிறார் அமீர்கான். இந்நிலையில், ஒருநாள் அவரது குழந்தைகளில் மூத்த பெண்கள் இருவரும் ஒரு சிறிய தகராறில் இரண்டு பசங்களை புரட்டி எடுக்க, அதை பார்க்கும் அமீர்கான், பெண...

60-வது பிறந்தநாள் : பிரபுவை வாழ்த்திய ரஜினி

சினி நிகழ்வுகள்
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனும், நடிகருமான பிரபுவுக்கு வருகிற டிசம்பர் 27-ந் தேதி பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு அவருக்கு 60 வயது ஆகிறது. இந்நிலையில், பிரபுவின் பிறந்தநாளையொட்டி இன்று பிரபுவை அவரது அன்னை இல்லத்தில் ரஜினி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ரஜினி நேரில் வாழ்த்தியது பிரபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த சந்திப்பின் போது, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் பிரபு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடனிருந்தனர். ரஜினியும் பிரபுவும் ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சினிமாவையும் தாண்டி, ரஜினியும், பிரபுவும் நிஜ வாழ்க்கையிலும் உடன்பிறவா சகோதரர்களாக இருந்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், தன்னுடைய பிறந்தநாளையொட்டி ரஜினி நேரில் வந்து வாழ்த்தியது பிர...

விக்ரம் ஜோடி பிரேமம் நாயகி

செய்திகள்
‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து விக்ரம் ‘வாலு’ பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகி தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது, இப்படத்தின் நாயகியாக ‘பிரேமம்’ படத்தின் நாயகிகளில் ஒருவரான சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருந்ததாக வெளிவந்த செய்திக்கு படக்குழுவினர் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருவதாகவும், இன்னும் ஒப்பந்தமாகவில்லை என்றும் கூறியிருந்தனர். தற்போது, சாய் பல்லவியையே இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளது. ‘பீமா’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் கேங்ஸ்டர் படம் இது என்பது குறிப...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

செய்திகள்
  இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹிந்தி  நடிகர் சல்மான் கான் நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இருவருக்கும் சென்னை ராயல் சினிமா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது