திமுக-தினகரன் கூட்டு சதியே ஆர்.கே.நகர் வெற்றிக்கு காரணம் -ஈபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு
ஆர்.கே.நகரில் நூதன முறையில் பணம் கொடுத்து தினகரன் ஃபார்முலா என்ற தீய சொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கியுள்ளனர் என்று முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், தினகரனும், திமுகவும் செய்த சதியின் வெளிப்பாடாக ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ''தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகரில் திமுக பெற்றிருக்கிறது. ஆர்.கே.நகரில் தனக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளை கூட பெற முடியாத நிலை திமுகவுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை தமிழக மக்கள் வியப்புடன் நோக்குகிறார்கள். திமுகவும் டிடிவி தினகரனும் சேர்ந்து செய்துள்ள கூட்டு சதியை அறிந்து பதவிக்காக இப்படியும் செய்வார்களா என மக்கள் கேள்வி ...

