சனிக்கிழமை, செப்டம்பர் 26
Shadow

செய்திகள்

தமிழில் தம்பி… தெலுங்கில் அண்ணன் அவதாரம் எடுக்கும் கடம்பன் ஆர்யா..!

தமிழில் தம்பி… தெலுங்கில் அண்ணன் அவதாரம் எடுக்கும் கடம்பன் ஆர்யா..!

செய்திகள்
ஆர்யா நடித்த கடம்பன் படம் சென்சார் செய்யப்பட்டு U சர்டிபிகேட் பெறப்பட்டுள்ளது கடம்பன் படம் தெலுங்கில் கஜேந்திரடு என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.. இரு மொழிகளிலும் 14 ம் தேதி வெளியாகிறது... கடம்பன் என்றால் முருகன்.. கஜேந்திரடு என்றால் வினாயகர்.. தமிழில் தம்பியாகவும் தெலுங்கில் அண்ணனாகவும் அவதாரம் எடுக்கிறார் ஆர்யா.....
தண்ணீர் சிக்கல் பேசும் அறம் டீசர் வெளியிடுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்..!

தண்ணீர் சிக்கல் பேசும் அறம் டீசர் வெளியிடுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்..!

செய்திகள்
தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் தனது இசையால் தனி மரியாதை ஏற்படுத்தி இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். விருது பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றவர். அவர் ரஜினியின் `2.0', விஜய்யின் 61-வது படம் என பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். அதேபோல் `லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழில் முன்னணி நாயகியாக வலம்வருகிறார். அவர் தற்போது `அறம்', `வேலைக்காரன்', `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்' மற்றும் பெயரிடப்படாத படம் என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான `டோரா' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் 'அறம்' படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா 'அறம்' படத்தில் கலெக்டராக நட...
இசையமைப்பாளர் வாங்கிய குரங்கு பொம்மை ஆடியோ உரிமை..!

இசையமைப்பாளர் வாங்கிய குரங்கு பொம்மை ஆடியோ உரிமை..!

செய்திகள்
குரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார். மேலும் அனிமேஷன் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றதை அடுத்து, இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது யு 1 ரெக்கார்ட்ஸ் மூலம் பெற்றுள்ளார். யுவன் இசை உரிமையை பெற்றது படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது....
தொழிலாளர் தினத்தில் மிரட்ட வரும் அஜீத் பட டீசர்..!

தொழிலாளர் தினத்தில் மிரட்ட வரும் அஜீத் பட டீசர்..!

செய்திகள்
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் `விவேகம்'. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். பல்கேரியாவில் பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை `விவேகம்' படத்தின் இரு மாறுபட்ட போஸ்டர்களை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு படக்குழு விருந்தளித்திருந்தது. முதல் போஸ்டர், அஜித் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் கோபமாக நிற்கும்படியாக இருந்தது. இரண்டாவது போஸ்டர் முற்றிலும் மாறுபட்டு, பனிப்பிரதேசத்தில் துப்பாக்கியுடன் இருப்பது போல இருந்தது.  இந்நிலையில், `விவேகம்' படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் அஜித்தின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். .  அஜித் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி, அவரது ரசிகர்களுக்கு மெகா விருந்தளிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்...
அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் ரசிகர்கள் சந்திப்பில் வேண்டுகோள்… !

அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் ரசிகர்கள் சந்திப்பில் வேண்டுகோள்… !

செய்திகள்
அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் ரசிகர்கள் மீண்டும் வேண்டுகோள் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி பேசினார்கள். “ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அனைத்து ரசிகர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். அவருடைய அரசியல் பிரவேசத்தை தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே அரசியல் தூய்மைப்படுத்தப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே விரைவில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்” என்று அவர்கள் பேசினார்கள். இதுகுறித்து இப்போது விவாதிக்க வேண்டாம் என்று ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் பதில் அளித்தனர்.  இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்த்து சென்னையில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக...
செல்பி மோகம் மலேசிய பிரதமரையும் விட்டுவைக்கவில்லை… ரஜினியுடன் செல்பி..!

செல்பி மோகம் மலேசிய பிரதமரையும் விட்டுவைக்கவில்லை… ரஜினியுடன் செல்பி..!

செய்திகள்
மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தனது மனைவியுடன் 5 நாள் பயணமாக இந்தியா வரும் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க விரும்பம் தெரிவித்தையடுத்து நேற்று சென்னை வந்தார். அவரை வரவேற்று சென்னையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.தங்கள் சென்னைப் பயணத்தின்போது ரஜினியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து ரஜினி வீட்டில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை 10:30 மணியளவில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு நஜிப் ரசாக்கும் அவர் மனைவியும் வந்தனர். அவர்களை ரஜினிகாந்த் வரவேற்றார். ரஜினியின் படங்கள், அவருக்கு தாங்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் என்பதையெல்லாம் ரஜினியிடம் கூறினர் மலேசிய பிரதமரும் அவர் மனைவியும். ரஜினியை மலேசியாவின் சுற்றுலா தூதராக வரும்படி இந்த சந்திப்பில் அழைப்பு விடுத்தனர். இதுகுறித்த எந்த முடிவையும் ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை. இந்த சந்திப்பு சுமார் 1 மண...
உதய நிதி ஸ்டாலினை தேடிய அதிமேதாவிகள்..!

உதய நிதி ஸ்டாலினை தேடிய அதிமேதாவிகள்..!

செய்திகள்
நட்பையும் நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது, அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் 'அதி மேதாவிகள்' திரைப்படம். 'அப்சலூட் பிச்சர்ஸ்' சார்பில் மால்காம் தயாரித்து வரும் இந்த 'அதி மேதாவிகள்' திரைப்படத்தில் பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் 'சதுரங்க வேட்டை' புகழ் இஷாரா நாயர் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது (கோலி சோடா) மற்றும் மாரி படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பேராதரவாக இருந்த எங்கள் அதி மேதாவிகள் படத்தின் தயாரிப்பாளர் மால்காம் அவர்கள...
அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் மகனை பாராட்டிய  பாரதிராஜா..!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் மகனை பாராட்டிய பாரதிராஜா..!

செய்திகள்
பிரபல கதாசிரியர் அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் மகனும், இயக்குனர் மணிரத்னத்தின் இணை இயக்குனருமான தினேஷ் செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’. இப்படம் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறது. கார்த்திகேயன், ஷாரியா, அருள்ஜோதி, ஜார்ஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, கதைகளின் கருபூலம், கதாபாத்திரங்களின் கதாநாயகன் என் நண்பன் ஆர்.செல்வராஜின் கடைக்குட்டியே. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பு இல்லை’ ஒரு ஜனரஞ்சக படம் மட்டுமல்ல, உயர பறக்க துடிக்கும் இன்றயை இளைஞர்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு. இந்த சமூகத்தில் கொட்டிக்கிடக்கும் உளவியல் உண்மைகளை எந்த சமரசமின்றி திரையில் கொண்டு வந்ததற்காக ஒரு கூடை பூக்கள் உனக்காக காத்திருக்கிறது. இ...
நியூயார்க் இந்திய திரைப்படம் விழாவிற்கு தேர்வான ‘ஒரு கிடாயின் கருணை மனு’

நியூயார்க் இந்திய திரைப்படம் விழாவிற்கு தேர்வான ‘ஒரு கிடாயின் கருணை மனு’

செய்திகள்
இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கும் 'ஈரோஸ்' தயாரித்து இருக்கும் 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம், நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கின்றது. இதன் மூலம் உலகளவில் உள்ள சினிமா ரசிகர்களின் உள்ளங்களை 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம் கவர்ந்து விடும் என்பதை உறுதியாகவே சொல்லலாம். இந்த படத்தை 'காக்கா முட்டை' புகழ் மணிகண்டனின் உதவியாளரான சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கிறார். இவர் உதவி இயக்குநராக பணிபுரிந்த 'காக்கா முட்டை' திரைப்படமும், பல சர்வேதச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பாராட்டுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. "தரமான கதையம்சம் நிறைந்த திரைப்படங்கள் அனைத்துமே சர்வேதச திரைப்பட விழாக்களால் எளிதில் அடையாளம் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் எங்களின் ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் நியூயார்க் இந்...