சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

விஜய் சேதுபதி நல்ல நாள் பார்த்து சொல்கிறார்

Displaying IMG_4815.JPG

வித்தியாசமான கதை  மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விற்கு பேர் போனவர் நடிகர் விஜய் சேதுபதி . இவரின் அடுத்த படமான ” ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ”  இவருடைய பெயர் சொல்லும் அப்படி பட்ட  ஒரு  வித்தியாசமான படமாகும் . இது ஓர் அட்வெஞ்சர் காமெடி படமாகும் . இதில் இவர் , இதுவரை யாருமே செய்திராத, ஒரு சுவாரஸ்யமான பழங்குடிஇன  தலைவராக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்க்காக 8 வெவ்வேறு தோற்றங்களில் கலக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட  முடிந்தாகிவிட்டது . விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்களும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும்  கவரும். இப்படத்தின் இன்னொரு கதாநாயகன் கவுதம் கார்த்திக் இப்படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு உயர்வார்.  மேலும் பல உயரங்களை தொடுவர் . தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மனதில் வைத்து கொண்டே ”ஒரு நல்ல நாள்  பாத்து சொல்றேன் ” படமாக்கி உள்ளோம்’  என தன்னம்பிக்கையுடன் கூறி விடைபெற்றார் இயக்குனர் திரு. ஆறுமுக குமார் .

294 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன