சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

புதுமுகம் ரிஷி இயக்கி நடிக்கும்   “ 143 “

 

                          நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா நடிக்கிறார்கள்.

Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு    ” 143″என்று பெயரிட்டுள்ளார்..

காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 ..

இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி.

அவரே கதானாயகனாகவும் நடித்து எழுதி இயக்குகிறார்.

நாயகிகளாக பிரியங்கா ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள்..

அனுபவ நடிகரான விஜயகுமார் பக்குவபட்ட கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்..

மற்றும் சுதா ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் நெல்லைசிவா மோனா முண்டாசுப்பட்டி பசுபதி இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.

 

 

319 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன