சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

‘திரி’

Displaying A038_C010_0128SU.0000270.jpg

‘இதற்கு தானே ஆசை பட்டாய் ‘ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்ற அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ‘திரி’ .இவர்களுடன்  ஜெயப்ரகாஷ், A L அழகப்பன் , டேனியல், சென்றாயன் மற்றும் அனுபமா குமார் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர்.

புதுமுக இயக்குனர் திரு.அசோக் அம்ரித்ராஜ் இயக்கியுள்ளார்  ஸீ கோல்ட் ப்ரொடக்க்ஷன் சார்பில் திரு.பால முருகன் மற்றும் பாலகோபி சேர்ந்து தயாரித்துள்ளனர்.

ஒளிப்பதிவு K G வெங்கடேஷ். இசை அஜீஸ் அசோக். படத்தொகுப்பு  ராஜா சேதுபதி.

”திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது.action-காமெடி -காதல் மற்றும் செண்டிமெண்ட், ஆகியவற்றை  சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் தந்தை -மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காண்பித்துள்ளார் இயக்குனர்.  ஜெயப்ரகாஷ்  எனது அப்பாவாக நடித்துள்ளார். A L அழகப்பன்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘திரி’ சில  சமுதாய அவலங்களை பற்றி பேசும் ஜனரஞ்சகமான குடும்ப படம். திரி ரிலீசிற்கு நாங்கள் அனைவரும் மிக ஆவலோடு  காத்துக்கொண்டிருக்கிறோம்”  என மிக ஆவலோடு கூறினார்  கதாநாயகன்  அஸ்வின்.

363 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன