வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

ஜி.எஸ்.டி. வரி மத்திய அமைச்சருக்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்..!

தமிழ் , தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்து தயாரிப்பாளர் சங்கமும் இனைந்து மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை வருகிற வெள்ளிகிழமை வைக்கவுள்ளது. GST அமலுக்கு பிறகு ரூபாய் 100 க்கு கீழ் டிக்கெட் வசூலிக்கும் திரையரகுகள் 18% வரியும் , ரூபாய் 100 க்கு மேல் டிக்கெட் வசூலிக்கும் திரையரங்குகள் 28% வரியும் கட்ட வேண்டி இருக்கும். வருகிற சனிக்கிழமை முதல் GST அமலாகவுள்ள இந்நிலையில் அனைத்து தயாரிப்பாளர் சங்கமும் இனைந்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது அதன் படி. பிராந்திய மொழி படங்களுக்கு வரிவிலக்கு அளித்தும் , பிற மொழி படங்களுக்கு குறைந்த அளவு வரி விதிக்க வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை. வெளிநாட்டு படங்களுக்கு அதிக வரி விதிக்கலாம். GST தற்போது உள்ள லட்சக்கணக்கான மிகச்சிறந்த சினிமா துறையினரை பாதிக்கும் என்கிறது தயாரிப்பாளர் சங்கம். தயாரிப்பாளர் சங்க இந்த வரி எந்த அளவு அவர்களை பாதிக்கும் என்பதையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. நடிகர்  கமல்ஹாசனும் அதில் கையெழுத்துயிட்டுள்ளார் என்பது குறிப்படதக்கது.

 

444 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன