
உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற 3ம் ஆண்டு உலக தமிழர் திருநாள் விழாவை உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமைதாங்கி நடத்தினார்.
தமிழ்தாய் வாழ்த்தோடு தொடங்கிய விழாவை ஜான் தொகுத்து வழங்கினார். அமெரிக்கா, நார்வே, கனடா, மலேசியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளி அமைப்பினர் வந்திருந்தனர்.
நார்வே நாட்டின் ஓசுலே மாநகர பெண் மேயர் கம்சாயினி குணரத்னே, இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன், இலங்கை எம்பிக்கள் சிவலிங்கம், சிவமோகன், அமெரிக்க தொழிலதிபரும், டாக்டருமான பழனி.ஜி.பெரியசாமி, குமரி அனந்தன், இலங்கை வானொலி தொகுப்பாளர் அப்துல் ஹமீது, யுகே உலக தமிழ் அமைப்பு நிறுவனர் ஜேக்கப், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் ஜெகன், இசையமைப்பாளர் ஹிப்ஆப் தமிழா ஆதி, தொழிலதிபர் இளம்பாரி கருணாகரன், கவிஞர் ரவிபாரதி, ஆவணபட இயக்குனர் ஆபிரகாம்லிங்கன், விளம்பர பட இயக்குனர் மணிமாறன், தொகுப்பாளினி அஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. லயோலா மாற்று ஊடகத்துறையினர் சார்பில் ஜல்லிக்கட்டு, வீர விளையாட்டுக்கள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழர் பாரம்பரிய ஆடை அணிவகுப்பும் நடைபெற்றது.

தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் சாதனை தமிழன் விருதுகள் வழங்கப்பட்டன. தொழில்துறையிலும், மருத்துவ துறையிலும், பொதுசேவையிலும் சிறப்பான பணிகள் செய்து வரும் டாக்டர் பழனி.ஜி.பெரியசாமி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஓசுலே மாநகர மேயர் கம்சாயினி குணரத்னே உட்பட பலருக்கு பல்வேறு துறைகளில் சாதனை படைத்ததற்காக சாதனை தமிழன் விருதுகள் வழங்கப்பட்டது.

விழா நிறைவாக 10ம் ஆண்டு எடிசன் விருதுகள் வழங்கும் டீசரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.
