ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியீடு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ்,கவுரவ தலைவர் பதவிக்கு இயக்குநர் விக்ரமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக கே.பாக்யராஜ்மற்றும் கவுரவ தலைவராக இயக்குநர் விக்ரமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் செயலாளராக மனோஜ்குமாரும், பொருளாளராக ரமேஷ் கண்ணாவும் போட்டியின்றி தேர்வாகினர்.

துணைத் தலைவர்களாக ஆர்.கே.செல்வமணி மற்றும் யார் கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக பேரரசு, மனோபாலா, வெங்கடேஷ், அரிராஜன், லியாகத் அலிகான், சின்னி ஜெயந்த், பாலசேகரன், யுரேகா, ஹேமமாலினி, விவேகா, கண்மணி ராஜா, சாய் ரமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இணை செயலாளர்களாக சி.ரங்கநாதன், வி.பிரபாகர், மதுரை தங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

308 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன