புதன்கிழமை, ஜூலை 22
Shadow

லைகா நிறுவனத்துக்கு போலீஸ் க்காவல்

தமிழ் திரையுலகில் பிரமாண்ட நிறுவனமான லைகா சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள் கட்டி உள்ளது. அதை தமிழர்களுக்கு வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக உடபட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதன் காரனமாக இலங்கை பயணத்தை ரஜினி ரத்து செய்தார்.
இதற்கிடையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் லைகா நிறுவனம் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார்.
இதை எதிர்த்து வேல்முருகன் மீது லைகா நிறுவனம் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.
இதன் காரணமாக லைகா நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

365 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன