ஜெண்டில்மேன் 2 இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்ககாசு பரிசாம்!
*இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்ககாசு, மீண்டும் அசத்தும் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் !*
தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்கள் தயாரிப்பதில், அவற்றை பிரமாண்டமாக விளம்பரபடுத்துவதில் புகழ்பெற்று விளங்கியவர் மெகா தயாரிப்பாளர் ' ஜென்டில்மேன்' கே.டி.குஞ்சுமோன். அவர் தயாரிப்பில் உருவாகவுள்ள, ' *ஜென்டில்மேன் 2* ' படத்தின் இசையமைப்பாளர் யாரென கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசு பரிசு அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர். சரத்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் முதல் பல ஜாம்பவான்களை திரையுலகில் உருவாக்கிய பெருமை அவரையே சேரும். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் அவற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர்.
பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். அதன் ஆரம்பத்தையே அத...
