ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’
ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த படம் பாகுபலி. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2017-ல் வெளியான பாகுபலி படத்தின் 2-ம் பாகமும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு பாகங்களும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில், பாகுபலி படத்தின் 3-ம் பாகத்தை இயக்க ராஜமவுலி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகுபலி 3-ம் பாகத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இதனை திரைப்பட...
