சமூக வலைதள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் – பிரபல இயக்குனர் கோரிக்கை!
சமூக வலைதள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் - பிரபல இயக்குனர் கோரிக்கை!
தெலுங்கில் மகேஷ் பாபுவின் போக்கிரி, பிசினஸ்மேன் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவர் இயக்கத்தில் தற்போது லிகர் என்கிற படம் உருவாகி வருகிறது. விஜய் தேவரகொண்டா இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
சினிமா மட்டுமின்றி அவ்வப்போது சமூக வலைதள பக்கத்திலும் ஏதாவது ஒரு முக்கிய விஷயத்தை பற்றி விவாதிப்பது இவரது வழக்கம். அந்த வகையில் தற்போது, ஒவ்வொருவருடைய சமூக வலைதள கணக்கையும், அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமென அவர் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்
இது குறித்து பூரி ஜெகன்நாத் தெரிவித்துள்ளதாவது: “நாளுக்கு நாள் சமூக வலைதளத்தில், பிடிக்காதவர்களை கிண்டல் செய்வதும், அவர்கள் மீது அவதூறு பரப்புவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அன்னை தெரசாவின் பு...
