த்ரிஷாவின் முன்னாள் காதலர் மீது பண மோசடி, மிரட்டல்,நம்பிக்கை மோசடி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் என்ற படங்களின் தயாரிப்பாளர் வருண்மணியன். சென்னை நந்தனத்தில் ரேடியன்ஸ் ரியாலிட்டி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் மீது அயனம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 27-ம் தேதி கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கடந்த பிப்ரவரி மாதம் தையூரில் ரேடியன்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தின் கட்டுமானத்தில், இரண்டு பிளாட்டுகளை தலா ரூ. 2 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிளாட்டுகளுக்கான முழுத்தொகை தராததால், தங்களிடம் தெரிவிக்காமல் வருண் மணியன் வேறொருவருக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே வெங்கடேசன் முன் தொகையாக கொடுத்த ரூ. 4 லட்சம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் வருண் மணியன் கொரோனா காலம் என்பதால் திருப்பி தர காலதாமதமாக்கியதாக தெரிவித்துள்ளார். பின் அலுவலகம் சென்ற...
