ஷேக்ஸ்பியரின் நாடகம் சினிமாவாகிறது..!
வில்லியம் ஷேக்ஸ்பியரின் கதைகள் தான் உலக சினிமாவுக்கே இன்று வரை வழி காட்டி.அவரின் கதைக்கு,காட்சிக்கு, கதாபாத்திரங்களுக்கு, வசனத்திற்கு மயங்காதவர்களே கிடையாது.அப்பேற்பட்ட வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலக பிரசித்தி பெற்ற 'மெக்பெத்' என்ற நாடகம் தென்னிந்தியவிலேயே முதன் முறையாக தமிழில் திரைப்படாமகிறது.
"பகைவனுக்கு அருள்வாய் "என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது .இந்த கதைக்கு திரை வடிவம் கொடுத்து இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், அனீஸ். இவர் "திருமணம் எனும் நிக்காஹ் "என்ற படத்தை இயக்கியவர் .இந்த கதைக்காக சுமார் மூன்று வருடம் ஆராய்ச்சி செய்து திரை வடிவம் கொடுத்துள்ளார்.
ஃபர்பிள் ப்ரேம்ஸ் (Purple Frames) தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். 96'புகழ் ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இரண்டு முக்கிய கதாபாத்திரத்தில்...
