சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்..!

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் கணவர் அஸ்வின் ராம்குமார் இருவரும் பரஷ்பரம்  விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, இவருக்கு சென்னை சேர்ந்த் தொழில் அதிபர்  அஸ்வின் ராம்குமார் இருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு  பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம்  நடைபெற்றது.  இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வேத் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

திருமணத்திற்கு பின்னர் சினிமா படம் தயாரிப்பில் சௌந்தர்யா ஈடுபட்டார். அவர் தயாரிப்பில் கோவா என்ற திரைப்படம் வெளிவந்தது.

இதற்கிடையே, அஸ்வின் –  சௌந்தர்யா தம்பதியிடையே முதலில் திருமண உறவில் கருத்து வேறுபாடுகள் எற்பட்டது. இதனை அடுத்து சின்ன, சின்ன சண்டைகள் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.  அதைச் சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர்.

ஆனால் இந்த பிரச்சினை தீரவில்லை. பிரசவத்திக்கு என ரஜினி வீட்டுக்கு வந்த சௌந்தர்யா அங்கோயே தங்கி வீட்டார். இதில் மேலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து கொண்டு இருந்தாது.  கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்த இவர்களது திருமண உறவில் பிறந்த மகன் வேத்துக்கு முதல் பிறந்த நாளைக் கொண்டாடினர். அப்போதும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகின்றது.

திருமணத்திற்கு பின்னர் சௌந்தர்யா தனது பெயரை சௌந்தர்யா ரஜினிகாந்த் என்றே தொடர்ந்தபோது எழுந்த சர்ச்சைக்கு ‘என்றுமே நான் ரஜினியின் மகள் என்று சொல்வதையே விரும்புகிறேன்’ என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார்.

சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் பிரச்சினை என்று வந்த செய்திகளை இரு தரப்பும் மறுத்து வந்தனர். ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் பகீரங்கமாக தனது நிலையை அறிவித்தார். கடந்த ஏழு மாதங்களாக, இத்தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரிடமும் பெற்றோர்கள் மற்றும் நல விரும்பிகள் சமரசம் செய்ய முயற்சி செய்து வந்தனர். ஆனால் இருவரும் விவாகரத்து செய்வதில் உறுதியாக உள்ளனர்.

இதனை அடுத்து பரஸ்பரம்
பிரிவது என முடிவெடுத்த நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் விவாகரத்து வேண்டி சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு கடந்த 26 ஆம் தேதி சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மேரி
கிளட்டா முன்பு ஆஜராகி பிரிந்து வாழ்வது என்ற முடிவில் மாற்றம் இல்லை என தெரிவித்தனர். இதனை அடுத்து இன்று உத்தரவிட்ட நீதிபதி இருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற திருமணம் அதற்கு பின்னர் நடைபெற்ற பதிவை ரத்து செய்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

260 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன