ரஜினி, விஜய்க்கு நன்றி – சிரஞ்சீவி
இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'கத்தி' படத்தின் ரீமேக் படமான 'கைதி நம்பர் 150' திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சிவி, இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்று தர உதவிய விஜய்க்கு தனது நன்றியை தெரிவித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தான் திரையுலகில் ரீஎண்ட்ரி செய்ய முடிவு செய்தபோது பல கதைகள் கேட்டபோதும் தனக்கு திருப்தி கிடைக்கவில்லை என்றும் ஆனால் 'கத்தி' படத்தை பார்த்த பின்னர், இதுதான் தனக்கு பொருத்தமான படம் என்று தான் முடிவு செய்ததாகவும் சிரஞ்சீவி கூறினார்.
கத்தி ரீமேக்கில் நீங்கள் நடிப்பதாக இருந்தால் நானே முன்னின்று உரிமையை பெற்று தருகிறேன் என்று முன்வந்த விஜய்க்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய 150வது படம் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும...
