26 கோடி செலவில் பிரமாண்டமான திட்டம்… ரஜினி கமல் பங்கேற்ற நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டுவிழா…
நடிகர் சங்க தேர்தலின் போது போட்டியிட்ட விஷால் தலைமையிலான அணியினர், ‘நாங்கள் வெற்றி பெற்றால் தென் இந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவோம்’ என்று அறிவித்து இருந்தனர்.
அதன்படி நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார்கள். தனியார் நிறுவனம் இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக போடப்பட்டிருந்த ஒப்பந்தம் திரும்ப பெறப்பட்டது. நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்இந்திய நடிகர் சங்க வளாகத்தில், நடிகர் சங்கம் சார்பிலேயே புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பொதுக்குழு ஒப்புதலும் பெறப்பட்டது. நிலம் மீட்கப்பட்டதையடுத்து கடந்த 5-ந்தேதி புதிய கட்டிடத்துக்கான பூஜை நடத்தப்பட்டது. இதில் நாசர், விஷால், கார...
