திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Author: Kodanki

கடைசி வரை மக்களை சிரிக்க வைப்பதே என் ஆசை: வடிவேலு

கடைசி வரை மக்களை சிரிக்க வைப்பதே என் ஆசை: வடிவேலு

செய்திகள்
விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, நடித்துள்ள படம் ‘கத்திச்சண்டை’. இதை சுராஜ் இயக்கி இருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். வருகிற 23-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் பேசிய வடிவேலு... “மக்கள் முகத்தில் கொஞ்ச நாட்களாகவே சிரிப்பை பார்க்க முடியவில்லை. துன்பத்தையும், துயரத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பார்க்கிறதுக்கே சங்கடமாக இருக்குது. மக்கள் கஷ்டப்படும் போது படத்தை விட வேண்டாம் என்றுதான் ‘கத்திச்சண்டை’ ரிலீசை தள்ளி வைத்தோம். கொஞ்ச நாளுக்கு பிறகு ‘ரிலீஸ்’ பண்ணலாமுன்னு இருந்தோம். இப்ப நாமாவது மக்களை சிரிக்க வைப்போம் என்று ‘கத்திச்சண்டை’ படத்தை ரிலீஸ் செய்கிறோம். கடைசிவரை மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஒரே மாதிரி நடித்தால் மக்களுக்கு போரடித்து விடும். அதனால் தான் விதம் ...
கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது: டாப்சி

கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது: டாப்சி

செய்திகள்
“நான் விருப்பப்பட்டு சினிமாவுக்கு வரவில்லை. மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் அதில் ஈடுபட்டேன். அதன்மூலம் சினிமா வாய்ப்பு வந்தது. அப்போதும் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. கைச்செலவுக்காகத்தான் நடித்தேன். ஒருகட்டத்தில் சினிமா பிடித்தது. அதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டேன். எனக்கு தன்னம்பிகை அதிகம். எதற்கும் பயப்படமாட்டேன். மாடலிங் செய்தபோது எனது தந்தை தூக்கம் இன்றி தவித்தார். மற்றவர்கள் தவறாக பேசுவார்களோ என்று பயந்தார். எனது படங்கள் விளம்பரங்களில் வெளியாகி நண்பர்கள் அவரை பாராட்டிய பிறகுதான் நிம்மதியானார். சுற்றி இருப்பவர்களுக்கு பயந்துதான் பெற்றோர்கள் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் வளர்க்கிறார்கள். நானும் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்தே வந்து இருக்கிறேன். பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது வரை வெளியுலகம் பற்றி எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வந்த பிற...
நடிகை கரீனா கபூருக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகை கரீனா கபூருக்கு ஆண் குழந்தை பிறந்தது

செய்திகள்
கரீனா கபூர் கடந்த 2012-ம் ஆண்டில், இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், அவர் கர்ப்பமானார். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. நிறைமாத கர்ப்பமாக இருந்த அவரை பிரசவத்துக்காக மும்பை பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு நேற்று காலை 7 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, ‘தைமுர் அலிகான் பட்டோடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். குழந்தை பிறந்தது பற்றி கரீனா கபூர்-சயீப் அலிகான் ஆகிய இருவரும் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:- “எங்களுக்கு ஒரு அழகான மகன் பிறந்து இருக்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் குழந்தைக்கு தைமுர் அலிகான் பட்டோடி என்று பெயர் சூட்டியிருக்கிறோம். கடந்த 9 மாதங்களாக எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் நலம் வ...