தற்கொலை செய்ய தூண்டுவதில் தாதா என பேரெடுத்த சினிமா பைனான்சியர் அன்பு கைதுக்கு பயந்து தப்பி ஓட்டம்..!
????இன்னிக்கு சூசைட் பண்ணிக்கிட்ட அசோக் (சசிகுமார் பார்ட்டனரின்) மரணத்துக்கு காரணமானவன் அன்பு என்று அழைக்கப்படும் அன்புச்செழியன். இவரு @ இவன் கிட்டத்தட்ட 2001 காலகட்டத்திலே(யே) தன்னை சசிகலாவின் பினாமி -ன்னு சொல்லிக் கொள்வான். இத்தனைக்கும் 2001-2006 ஏ டி எம் கே ஆட்சி காலத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக பல்வேறு நபர்கள் அரெஸ்ட் செய்யப் பட்டாலும், ஜி.வி.தற்கொலைக்கு காரணமான இந்த அன்புச் செழியன் கடைசி வரை அரெஸ்ட் செய்யப் படவேயில்லை. அதற்கு காரணம் சசிகலாவின் ஆசி என்று பெருமையோடு சொல்லிக் கொண்ட அன்பு உண்மையைச் சொல்கிறாரா பொய் சொல்கிறானா என்பது கடைசி வரையில் தெரியவில்லை.
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இவன் ஆளுங்கட்சிதான். சாதாரணமாக தாதாக்கள் எல்லாம் ஒரு கொலைச் சம்பவத்திலிருந்து பேரெடுப்பார்கள். புகழ்பெறத் தொடங்குவார்கள். ஆனா இந்த அன்பு-ங்கறவன் தற்கொலைச் சம்பவத்தில் (மட்டுமே) புகழ...









