அம்மாவை பெருமைப்படுத்துங்கள். நிச்சயம் நல்லா இருப்போம் கெளதமி புத்ர சாதகர்ணி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பேச்சு..!
ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.
இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி,சுபலேகாசுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் . நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.
இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா புத்ர கிரிஷ். இவர் தமிழில் சிம்பு நடித்த வானம் படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும் இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாலகிருஷ்னா இவர் தமிழ் நாட்டில் ஒரு விழா மேடையில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. மற்றும் விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் சி.கல...









